தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    இக்காலத்தில் எழுதப்பெற்ற இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் பத்து. இவற்றுள் முகம்மது நபி அவர்களைக் காப்பிய நாயகராகக் கொண்டு மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றில் ஏழு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. மரபுக் கவிதைகளில் (1) நாயக வெண்பா, (2) நெஞ்சில் நிறைந்த நபிமணி, (3) இறை பேரொளி நபிகள் நாயகம் - அருட் காவியம்,    (4) ஞானவொளிச் சுடர் ஆகிய நான்கு நூல்கள் உள்ளன.

    புதுக்கவிதையில் (1) நாயகம் ஒரு காவியம், (2) நாயகம் எங்கள் தாயகம்,  (3) அண்ணலே யாரஸூலுல் லாஹ் என மூன்றும் உள்ளன.

    பத்துக் காப்பியங்களில் யூசுப் ஜுலைகா, மஹ்ஜபீன் புனித பூமியிலே, பிரளயம் கண்ட பிதா (நூஹ் நபி வரலாறு) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு,

    1)
    நாயக வெண்பா
    2)
    யூசுப் ஜுலைகா
    3)
    மஹ்ஜபீன் - புனித பூமியிலே

    ஆகிய மூன்று காப்பியங்களையும் பற்றிப் படிப்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 13:17:56(இந்திய நேரம்)