Primary tabs
6.1 நாயக வெண்பா
மனித குலத்திற்கு வழிகாட்ட இறைவனின் தூதராக வந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றினை வெண்பாவில் பாடுவது
நாயக வெண்பா.முகவை மாவட்டத்தின் பனைக்குளம் என்னும் ஊரைச் சார்ந்த முதுபெரும் புலவர் மு.அப்துல் மஜீது என்பவர் பாடியுள்ளார்.
இவர் கவிப்பூஞ்சோலை, இலக்கியப் பூங்கா, தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள், பெருமானார் அருள் வேட்டல் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
திருநபியின் வரலாற்றை வெண்பாவில் 632 பாடல்களாகப் பாடியுள்ளார். இதுவும் சீறாப்புராணம் போன்று விலாதத்து, நுபுவ்வத்து, ஹிஜ்ரத்து என
மூன்று காண்டங்களை உடையது.