தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினையெச்சம் - விளக்கம்

  • 5.5 வினையெச்சம் - விளக்கம்

    வினைச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சச்சொல், வினையெச்சம் எனப்படும். அது வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வினையெச்சம் காலமும் செயலும் உணர்த்தும்.

    (எ.கா)
    ஓடி வந்தான்
    கிழித்துக் கொடுத்தான்

    5.5.1 வினையெச்சம் மூவிடங்களிலும் இடம்பெறல்

    வினையெச்சம் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக வரும்.

    (எ.கா)
    தன்மை ஒருமை
    - உண்டு வந்தேன்
    தன்மைப் பன்மை
    - உண்டு வந்தோம்
    முன்னிலை ஒருமை
    - உண்டு வந்தாய்
    முன்னிலைப் பன்மை
    - உண்டு வந்தீர்
    படர்க்கை ஆண்பால்
    - உண்டு வந்தான்
    பெண்பால்
    - உண்டு வந்தாள்
    பலர்பால்
    - உண்டு வந்தார்
    ஒன்றன்பால்
    - உண்டு வந்தது
    பலவின்பால்
    - உண்டு வந்தன

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 15:24:37(இந்திய நேரம்)