தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.9 தொகுப்புரை

    பெயரெச்சம், அறுவகைப்பெயர்களுள் ஒன்றைக் கொண்டு முடியும். இடைநிலை மற்றும் விகுதியால் காலம் உணர்த்தும். ‘செய்யும்’ என்னும் வாய்பாடு ஈறுதிரிந்து வருவது உண்டு.

    வினையெச்சம், பல வாய்பாடுகளையும் சொல் வடிவங்களையும் பெற்றுவரும். தம் வினைமுதல் வினையாலும், பிற வினைமுதல் வினையாலும் முடிவுபெறும். முற்றுச் சொல் எச்சப்பொருள் தருவதும் உண்டு.

    இருவகை எச்சங்களும் எதிர்மறைப் பொருள்தரல், அடுக்கி வரல், இடைப்பிறவரல் ஆகிய இயல்புடையனவாகும்.

    இவற்றை இப்பாடம் விளக்கியிருக்கிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    வினையெச்ச வாய்பாடுகள் யாவை?

    2.

    தம் வினைமுதல் வினையும், பிற வினைமுதல் வினையும் கொண்டு முடியும் வினையெச்சங்கள் இரண்டிற்குச் சான்று தருக.

    3.

    எதிர்மறை வினையெச்சம் பற்றி எழுதுக.

    4.

    வினையெச்சத்தில் இடைப்பிறவரலுக்குச் சான்று தருக.

    5.

    முற்றெச்சம் குறித்து எழுதுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 16:23:20(இந்திய நேரம்)