தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    பசலை உணீஇயர் வேண்டும் - பசலை எதனை உண்கிறது?

    வெள்ளிவீதியார் பாடலில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் கூற்று இது. தன் அழகு தனக்கும் பயன்படாமல் தலைவனுக்கும் பயன்படாமல் பசலைநோயால் உண்ணப்படுகிறது என அவள் வருந்துகிறாள். உண்ணப்படுகிறது என்பதற்கு அவள் அழகு நோயினால் மறைக்கப்படுகிறது என்பது பொருள். பசலை: பிரிவினால் ஏற்படும் நிறமாற்றம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 17:58:04(இந்திய நேரம்)