தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 1.8 தொகுப்புரை

  இப்பாடத்தில் நாம் தும்பைத் திணை குறித்து விளக்கங்களையும் அதன் 23 துறைகள் குறித்தும் அறிந்தும் கொண்டோம். தொல்காப்பியர் தும்பைத் திணைக்கு 12 துறைகள் கூறியிருக்கப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் துறைகளைப் புதிதாகச் சேர்த்துள்ளார். இது பிறத்திணை வளர்ச்சியைக் காட்டுகிறது.

  தும்பைப் போரின் சூழலையும், தும்பைப் போரின் தனித்த இயல்பையும், போர்க்களத்து வீரச்செயல்களையும், போர்க்களத்து ஆடல்களையும், வீரத்தைச் சிறப்பிக்கும் தன்மையையும் இந்த 23 துறைகளும் காட்டுகின்றன.

   

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1.
  எருமை மறம் என்ற துறைப் பெயருக்கான காரணம் என்ன?
  2.
  தொல்காப்பியர் கூறிய எந்தத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் இரண்டாகக் கூறுகிறார்?
  3.
  பேய்க்குரவை என்பதற்குக் கொளு தரும் விளக்கம் யாது?
  4.
  வீரச்சிறப்பைக் காட்டும் துறைகள் எவை?
  5.
  தொகைநிலை என்ற துறை தும்பை தவிர வேறு எந்தத் திணையில் உள்ளது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 18:51:19(இந்திய நேரம்)