Primary tabs
4.1 செய்யுள்நெறி
நெறி என்பது சொல்லமைப்பு வகையினைக் குறிக்கும். செய்யுளில் அமையும் சொல்லமைப்பு வகைகளை எடுத்துரைப்பது செய்யுள்நெறி ஆகும்.
செய்யுள்நெறி கீழ்க்காணும் கூறுகளைக் கொண்டுள்ளது.
1)உயிரெழுத்து (குறில், நெடில்) அமையும் நிலை.2)மெய்யெழுத்தின் வகைகள் (வல்லினம், மெல்லினம், இடையினம்) தனித்து வருதலும் கலந்து வருதலும்.3)பொருள்தெளிவுக்கு உரிய சொற்கள் இடம் பெறுதலும் வருவித்தலும்.4)வெளிப்படைப் பொருள் அமைதலும் குறிப்புப் பொருள் அமைதலும்.5)ஓசை நலம் குன்றாமை.6)சொல்நலம், பொருள்நலம் அமைதல்.7)கருத்து, வருணனைகளின் நம்பகத்தன்மை.8)வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் நிலை.9)ஒன்றன் இயல்பை வேறொன்றில் ஏற்றி உரைத்தல்.