தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.8 தொகுப்புரை

    செய்யுளின் சொல்லமைப்பு வகையே செய்யுள்நெறி எனப்படும். அது வைதருப்பநெறி எனவும் கௌடநெறி எனவும் இருவகைப்படும். அவை ஒவ்வொன்றும் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தல்இல் பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனப் பத்துக் குணப்பாங்குகளை உடையன.

    எளிமையாக அமையும் வைதருப்ப நெறியிலிருந்து சில வேறுபாட்டுத் தன்மைகளைக் கொண்டதாக எழுந்தது கௌடநெறியாகும்.

    வைதருப்ப நெறியிலான செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை ஆகிய ஐந்து குணப்பாங்குகளை உரிய சான்றுகளுடன் இப்பாடத்தில் நாம் அறிந்து கொண்டோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    சமநிலை என்னும் குணப்பாங்கை வரையறுக்க.
    2.
    இன்பம் என்னும் குணப்பாங்கின் வகைகளை எழுதுக.
    3.
    சொல்லின்பத்திற்கு ஒரு சான்று தருக.
    4.
    ஒழுகிசை என்பது யாது?

    5.

    சொல்லின்பம் எவ்வெவ் வகைகளில் அமையும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 18:41:16(இந்திய நேரம்)