Primary tabs
-
1.2 ஒலியன் (Phoneme)
ஒலியன் என்பது மொழியில் உள்ள ஒலிகளை, விளக்க மொழியியல் (Descriptive linguistics) அடிப்படையில் விளக்குவதாகும். அவ்வாறு விளக்கும்போது, அவ்வொலியானது எந்த வகையைச் சார்ந்தது (உயிர், மெய்) என்பதையும், அவ்வொலிகள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதையும் நோக்க வேண்டும். இவ்வாறு பிரித்துப் பார்த்துப் படிப்பதற்கு ஒலியனியல், (phonology) என்று பெயர்.
சான்று :
உயிர் (Vowel)
‘இ’ - மேல் முன் உயிர் (high front vowel)
‘அ’ - கீழ் பின் உயிர் (low back vowel)இவ்வொலிகள் உயிர்க்குறில்கள் (short vowels) ஆகும். இவைகளுக்கு இணையான உயிர் நெடில்களை long vowels என்பர். மொழியியலில் ஐந்து உயிர்க்குறில்கள், இவைகளுக்கு இணையான நெடில்களை ஒரே ஒலியன் ஆகக் கொண்டு மீக்கூற்று ஒலியன் (suprasegmental phoneme) என்று அழைப்பது வழக்கம்.
வருணனை மொழியியலின்படி மெய் எழுத்துகளைப் பிரித்துப் பார்க்கலாம். ஒரு சொல்லில் இடம்பெறும் ஓர் ஒலி, அதன் முன்னும் பின்னும் அமைந்து வரும் ஒலியன்களைப் பொறுத்து, தன் தன்மையிலிருந்து சற்று மாறுபட்டு ஒலிப்பதையே மாற்று ஒலி (allophone) என்கிறோம்.
சான்று :
கப்பல்
மகன்
தங்கம்இங்கு இடம்பெறும் க என்னும் ஒலியை உச்சரிக்கும் போது, சொல்லுக்கு ஏற்றபடி அதன் மாற்றுத் தன்மையை நம்மால் உணரமுடிகிறது.