தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- எண்ணிக்கை

  • 1.7 எண்ணிக்கை

        தமிழில் முன்னரே எழுத்தின் எண்ணிக்கை அதிகம் என்று கூறுகிறார்கள். தமிழ் எழுத்துகளாகிய 247 எழுத்து உருவங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு நாம் இந்தக் கல்வெட்டு எழுத்து வடிவங்களான 60 எழுத்துகளையும் (5x12) சேர்த்து விடுகிறோம்

        இவ்வாறாக, தமிழின் எழுத்து எண்ணிக்கையில் வெவ்வேறு கால கட்டங்களிலும் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. அதோடு எழுத்தின் எண்ணிக்கையைப் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தி அதில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

        இபிறமொழிச் சொல்லைத் ‘தத்து’ எடுத்து ஆளுவதால் மொழியின் அடிப்படையினையே அது சிதைக்கும். அது எழுத்துக் குழப்பம் தலை எடுப்பதற்கும் இடமாகிறது. அதோடு கடன் வாங்க ஆரம்பித்தால் எல்லையில்லாது போய்விடும். எழுத்துகளைப் பெருக்கிக் கொண்டுபோனால் எங்கு கொண்டுபோய் நிறுத்துவது என்று புரியாமல் போய்விடும். இவற்றை மனத்தில் கொண்டு எழுத்தின் தொகையைக் கையாள வேண்டும். ஆங்கில மொழியில் எவ்வளவோ கடன் வாங்கிய சொற்கள் இருந்தாலும் அதன் எழுத்துத் தொகையில் எவ்வித மாற்றமும் இன்றி நெடுங்காலமாக இருந்து வருகிறது. மொழி காலந்தோறும் மாறிக்கொண்டே வரும். எழுத்து மொழியை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வழக்கம் உலகில் பல மொழிகளில் கிடையாது. ஆனால் சமுதாயத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் போது புதுநிலையாக்கம் செய்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பதும் எழுத்துகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது     பற்றி எண்ணுவதும் இயற்கையானது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:00:54(இந்திய நேரம்)