Primary tabs
-
1.8 தொகுப்புரை
எழுத்துகளின் எண்ணிக்கை வரலாறு என்ற இப்பாடத்தின் மூலம் தமிழ் ஒரு வளரும் மொழி என்று அறிந்தீர்கள். எழுத்துகளின் எண்ணிக்கையையும், எந்தெந்த நூற்றாண்டில் எவ்வாறான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் அறிந்திருப்பீர்கள். எம்மாதிரியான எழுத்துகள் அறிமுகப்பட்டு வருகின்றன என்பதையும் படித்திருப்பீர்கள். எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு, எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு, தமிழின் ஒலிவளம், எழுத்தின் எண்ணிக்கையை வெவ்வேறாகப் பயன்படுத்துவோர் பற்றியும் கண்டீர்கள்.