தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

        இப்பாடத்தில் எழுத்துகளின் புணர்ச்சி, அதில் ஏற்பட்டுள்ள, ஏற்படுகின்ற மாற்றங்கள் தக்க சான்றுகளுடன் விளக்கப்படுகின்றன. மரபிலக்கணங்கள் புணர்ச்சியை (சந்தி) எவ்வாறு பயன்படுத்தின என்ற செய்தியை விளக்கமாக அறிய முடிகிறது. இப்பாடத்தின் கீழ் புணர்ச்சி மாற்ற வரலாறு எழுத்துகளில் புணர்ச்சி மாற்றம், ஒலிகளில் புணர்ச்சி மாற்றம், சொல்லியலில் புணர்ச்சி மாற்றம் என மூவகையாகப் பிரிக்கப்பட்டுச் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றது. அவற்றுள் சகர மாற்றம், ஙகர மாற்றம், மகர மாற்றம், ஈற்று வல்லெழுத்து     இரட்டிப்பு ஆகியன நன்கு விளக்கிக் காட்டப்படுகின்றன. ஒலிக்குறிப்புச் சொற்கள் என்று சொல்லக்கூடிய ‘நறுக், பளீச்’ போன்ற சொற்கள் புணர்ச்சியில் எவ்வாறு வருகின்றன என்பது பற்றி விளக்கப்படுகிறது. அவற்றோடு ஒலிபெயர்ப்பில்     ஏற்படும்     மாற்றங்கள், காலப்பெயர்கள் இரட்டிக்கும்     முறை, குறில் நெடில் ஆதல், பண்புப் பெயர்கள் மற்றும் சாரியைகளின் பயன்பாடுகள் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றன. (அ)த்து, ‘இன்’ போன்ற சாரியைகளின் வழக்குப் பற்றியும் அறிய முடிகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:05:11(இந்திய நேரம்)