Primary tabs
4.7 தொகுப்புரை
இதுவரையில் புணரியல் என்றால் என்ன என்பது பற்றியும், புணர்ச்சியில் மாற்றங்கள் பற்றியும் அறிந்தீர்கள். தொல்காப்பியத்திலும் இடைக்காலத்தில் தோன்றிய நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்களிலும் புணர்ச்சியின் நிலை என்ன என்பதையும் படித்துப் புரிந்து கொண்டீர்கள்.
காலத்திற்கு ஏற்பப் பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தமையால் அச்சொற்கள் தமிழ் மொழியில் ஏற்கனவே இருந்த புணர்ச்சி விதிகளில் இருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றன என்பது பற்றிப் படித்தீர்கள்.