தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04122-பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

        தமிழ்மொழி நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆதலால் தமிழ்மொழியின் அமைப்பில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனலாம். பல போர்களால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தமிழ் மொழியின் முன்னைய வடிவிலிருந்து சற்று மாறி இருப்பது இயல்பே. மாறுதல் ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் படியே. தமிழ்மொழியில் பல இலக்கணக் கூறுகள் உள்ளன. பொதுவாக எல்லா இலக்கணக் கூறுகளிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் பற்றி நாம் தொடர்ந்து கற்று வருகிறோம்.

        இப்பாடத்தில் வேற்றுமை என்றால் என்ன? என்பதைப் பற்றிக் காண்போம். அவை எத்தனை வகைப்படும்? என்பதையும் அவ்வேற்றுமைகள் என்னென்ன பெயர்களால் சுட்டப்படுகின்றன? என்பதையும் பார்க்கலாம். வேற்றுமைகள் சங்க காலத்தில் என்னென்ன உருபுகளைப் பெற்றிருந்தன? இடைக்ககாலத்தில் அவை எவ்வாறு விரிவடைந்தன? பின்பு வெவ்வேறு காலச்சூழலுக்கு ஏற்ப அவை குறைந்தனவா? அல்லது விரிவடைந்தனவா? இவை போன்ற வினாக்களுக்கு இப்பாடத்தில் விடை காணலாம்.

        பன்மை விகுதியான 'கள்' என்பதைப் பற்றியும் இப்பாடத்தில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது. மேலும் தமிழ்மொழியின் இலக்கணக் கூறுகளை வரலாற்று நோக்கிலும் மொழியியல் அடிப்படையிலும்     விளக்கும்     போது     இலக்கண இலக்கியங்களிலிருந்தும்     பேச்சுத்     தமிழில்     இருந்தும் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டிருக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 13:00:09(இந்திய நேரம்)