Primary tabs
-
2.8 தொகுப்புரை
இப்பாடத்தில் வேற்றுமை உருபு என்றால் என்ன? அது எவ்வாறு வளர்ச்சியுற்றது? என்றும் சங்ககாலம் முதல் தற்காலம் வரை அவ்வேற்றுமை உருபுகள் அடைந்த சீரான மாற்றங்கள் என்னென்ன என்றும் விளக்கப்பட்டுள்ளன.
எத்தனை வேற்றுமை உருபுகள் அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்து வருகின்றன என்பது பற்றியும் செய்திகள் கிடைக்கின்றன.
எவ்வகையான காரணங்களால் வேற்றுமை உருபு பிறிதொரு சொல்லை வேற்றுமை உருபாகத் தன்னகத்தே கொண்டது என்றும் அறிந்து கொண்டீர்கள்.
தற்காலத்தில் அவ்வேற்றுமை உருபுகள் வேறுபட்ட பொருளை உணர்த்துவதற்காகப் பலவிதமாக விரிவடைந்துள்ளன என்பதைப் பற்றி அறிந்தீர்கள்.
இவற்றோடு நில்லாமல் பன்மை விகுதியான 'கள்' என்றதனையும் அதன் வளர்ச்சியினையும் பற்றிப் படித்தறிந்தீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II