Primary tabs
-
2.1 காலப்பகுப்பு
தமிழ்மொழியின் வரலாற்றினைச் சங்ககாலத்தமிழ், இடைக் காலத் தமிழ், தற்காலத்தமிழ் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அந்தப் பிரிப்பின் அடிப்படையில் விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் தோன்றிய காலம் சங்ககாலம் என்று பகுக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்களும், சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற பெருங்காப்பியங்களும், ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடிய பக்தி இலக்கியங்களும், வீரசோழியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும் தோன்றிய காலம் இடைக்காலம் என்று பகுக்கப்பட்டுள்ளது, 18 ஆம் நூற்றாண்டு முதல் இக்காலம் வரை தற்காலம் என்று பகுத்து அமைக்கப் பட்டுள்ளது..