திறனாய்வு அணுகுமுறைகளில் சிறப்பானதோர் இடத்தை
வகிப்பவை, வரலாற்றியல் திறனாய்வு, உளவியல் திறனாய்வு மற்றும்
தொல்படிமவியல் திறனாய்வு ஆகியவையாகும். காலம், இடம் எனும்
மையங்களில் இலக்கியம் காலூன்றி நிற்கிறது எனும் கருதுகோளை
அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது வரலாற்றியல் அணுகுமுறை.
இது காலச் சூழமைவையும், காலந்தோறும் இலக்கியம் பெறுகின்ற
மாற்றத்தையும் ஆராய்கிறது.
உள்ளத்தின் கோலங்களையும் இலக்கியத்தில் அவை
சித்திரிக்கப் பட்டிருக்கின்ற கோணங்களையும் உளவியல்
அணுகுமுறை உள்நுழைந்து வெளிப்படுத்துகிறது. சிக்மண்ட் ஃபிராய்டு
வகுத்த பகுப்பியல் உளவியல் என்பது, திறனாய்வில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
உளவியல் ஆராய்ச்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகக் கருதப்படக்
கூடியது, தொல்படிமவியல் அணுகுமுறை. கூட்டு நனவிலி மனம்
என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு இது அமைகிறது.
மனித குலத்தின் நினைவோட்டங்களில் ஆழமாகப் பதிந்துள்ள
தொன்மங்களைப் பற்றியும் தொல்படிமவியல் அணுகுமுறை
ஆராய்கிறது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
1)
உளவியல் தனித்துறையாக வளர்வதற்குமுன்னால்,
அதில் வல்லவர்களாகக் கருதப்பட்டவர்கள் யார்?
2)
பகுப்புமுறை உளவியலை வகுத்துச் சொன்ன
அறிஞர் யார்?
3)
உள்ளம் அல்லது மனம் என்பது மூன்று
அடுக்குகளைக் கொண்டது. அந்த மூன்றும் எவை?
4)
மேலைநாடுகளில் தீங்கு, கேடு முதலியவற்றைப்
பிரிதிநிதித்துவப் படுத்தும் தொல்படிமமாகச்
சித்தரிக்கப்படும் மாந்தர் யார்?
5)
தன் வரலாற்று உளவியல் திறனாய்வு செய்த
அமெரிக்கத் திறனாய்வாளர் ஒருவரைக் குறிப்பிடுக.