Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.தன்னேரில்லாத் தலைவனின் பண்புகள் யாவை?
மக்களில் நற்பண்பு மிக்கவர்களைக் காப்பியத் தலைவர்களாகக் கொள்ளும் மரபு உள்ளது. தன்னேரில்லாத் தலைவன் என்பான் பேராண்மை, எல்லாரையும் தன் வயப்படுத்தும் தன்மை, உயர்பண்புடைமை, விழுமிய கல்வியறிவு, அனைவரையும் ஈர்க்கும் தோற்றப் பொலிவு, அனைவராலும் விரும்பப்படும் தன்மை, தான் வாழும் காலத்திலேயே தன்னைப் பற்றிய வரலாறு தோன்றக் காரணமாக இருத்தல் போன்ற தலைமைப் பண்புகள் உடையவனாய் இருத்தல் வேண்டும்.