Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
2. கோப்பெருந்தேவியின் கனவு குறித்து எழுதுக.
கோப்பெருந்தேவி கண்ட கனவில் பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடையும் செங்கோலும் சரிந்து விழுந்தன; அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணி இடைவிடாது ஒலித்தது; அப்போது எட்டுத் திசைகளும் அதிர்ந்தன; இரவு நேரத்தில் வானவில் தோன்றியது; பகற்பொழுதில் விண்மீன்கள் மிக்க ஒளியுடன் பூமியில் விழுந்தன. இத்தகைய தீய காட்சிகளால் வரக்கூடிய துன்பம் ஒன்று உண்டு என்பதை உணர்ந்து கோப்பெருந்தேவி உள்ளம் நடுங்கியது. இப்பகுதியில் பாண்டிய மன்னன் வீழ்ச்சி அடையப் போவது தேவி கண்ட கனவின் மூலம் குறிப்பாக உணர்த்தப்பட்டது.