Primary tabs
6.4 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை கண்ணப்ப நாயனார் புராணம் பற்றிய செய்திகளைப் படித்தீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதனை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள்.
புராணம் என்றால் என்ன என்பது பற்றியும், பெரிய புராணம் கூறும் செய்திகளைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
கண்ணப்ப நாயனார் பற்றிய செய்திகளைப் பற்றி, சிறப்பு நிலையில் விளக்கமாக அறிந்து இருப்பீர்கள்.
கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு முதலியவற்றால் பக்தி நெறியில் படைக்கும் காப்பியங்களுக்குப் பெரிய புராணம் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளதனை அறிந்திருப்பீர்கள்.
பெரிய புராணத்தின் நூலாசிரியர், பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள், இலக்கியச் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.