Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5)தரப்படுத்துதல் பற்றிய கருத்துகளைத் தொகுத்துத் தருக.சொல்லாக்கத்தில் கருத்தியலுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஒரு கருத்தியலைக் குறிக்கப் பல சொற்கள் பல்வேறு கால கட்டங்களில் உருவாக்கப் படுகின்றன. அவற்றில் மரபினுக்கும் பொருளினுக்கும் ஏற்புடையன நிலைத்து நிற்கும்; பிற ஆக்கங்கள் மெல்ல வழக்கொழிந்து விடும். ஒரு பிறமொழிச் சொல்லுக்கு நிகராகப் பல சொற்கள் தமிழில் ஆக்கப்பட்டிருப்பினும் அவற்றில் ஒன்றைத் தரப்படுத்துதல் வேண்டும்.
எடுத்துக்காட்டு: Computer - கம்பியூட்டர், கணிப்பொறி