Primary tabs
-
4 - விடை4
மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் சமண சமயம் அக்கால நிலையில் சிறப்பாக இருந்தது என்பதை எங்ஙனம் அறியலாம்?
மணிமேகலை, வஞ்சிநகர்க்கண் இருந்த பல்வகைச் சமயவாதிகளையும் கண்டு, அவரவர் சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி அவர்களைச் சந்திக்கிறாள். அவர்களுள் ஒருவர் நிகண்டவாதி. நிகண்டவாதி சமணசமயத்தைச் சார்ந்தவர். அவர் மூலம் நிகண்ட மதமாகிய சமண சமயக் கருத்துகளைக் கேட்டறிவதாகச் சமயக்கணக்கர் தம் திறங்கேட்ட காதையில் இடம்பெறுகிறது. அதனால் மணிமேகலை மூலம் அக்கால நிலையில் சமணசமயம் இருந்ததை அறியலாம்.