Primary tabs
-
2 - விடை2
மதுரையில் சமணப்பள்ளி இருந்தது என்பதை எப்படி அறிய முடிகிறது?
அந்தணர்ப்பள்ளி, பௌத்தப்பள்ளிகளைப் பற்றிப் பேசும்போது சமணப்பள்ளியும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதாவது அருகதேவன் கோயில் குளிர்ந்த தண்ணிழல் உடையது. செம்பினால் செய்ததைப்போல விளங்கிய சுவர்களை உடையது... அக்கோயிலுள் பூவும் புகையும் ஏந்திச் சமண இல்லறத்தார் வணங்குகின்றனர். முக்காலங்களையும் உணர்ந்து, அவற்றை உலகத்தார்க்குச் சொல்கின்ற ஆற்றலைப் பெற ஆன்று அடங்கிய சமண முனிவர் நோற்கின்றனர். இதிலிருந்து மதுரையில் சமணப்பள்ளி இருந்ததை அறிய முடிகிறது..