தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    தமிழ் உரைநடை வளர்ச்சியில் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கிறித்தவர்கள் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணி, அகராதிப் பணி, இலக்கணப்பணி, அச்சுப்பணி, இதழியல் பணி ஆகியன தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தன. உரைநடை பரவுவதற்கும், உரைநடையில் படைப்பிலக்கியங்கள் தோன்றுவதற்கும் கிறித்தவர்கள் காரணமாக அமைந்தனர். புதினம், சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு முதலிய உரைநடை இலக்கிய வடிவங்களைக் கிறித்தவர்கள் கையாண்டுள்ளனர். இப்படைப்புகள் கிறித்தவக் கோட்பாடு, சமுதாய சீர்திருத்தம், தனிமனித அறங்கள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டவை. இப்பாடத்தில் கிறித்தவர்கள் உரைநடை வளர்ச்சிக்குச் செய்துள்ள பங்களிப்புகளும், கிறித்தவர்கள் படைத்துள்ள புதினம், சிறுகதை, நாடகம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

     

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 14:57:12(இந்திய நேரம்)