தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.5 தொகுப்புரை

    கிறித்தவர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பல்வேறு வகையில் உதவியுள்ளனர். விவிலிய மொழிபெயர்ப்புகள் தமிழ் உரைநடை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளன. உரைநடையைப் பரவலாக்கியதற்கும் கிறித்தவர்கள் காரணமாக அமைந்தனர். மேலும், உரைநடையில் படைப்பிலக்கியங்கள் உருவாகவும், பெருகவும் கிறித்தவர்கள் வழிவகுத்தனர். முதல் தமிழ்ப் புதினத்தைப் படைத்தவரும் கிறித்தவரே.

    கிறித்தவர் படைத்த கதை இலக்கியங்கள் பெரும்பாலும், விவிலிய மாந்தர் வரலாற்றையும், இயேசு கூறிய கதைகள், அறிவுரைகள் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. கிறித்தவக் கோட்பாடுகளை வற்புறுத்தும் வண்ணம் புதினங்களும், சிறுகதைகளும், நாடகங்களும் படைக்கப்பட்டுள்ளன. பெண்கல்வி, சாதி மறுப்பு முதலிய சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை வற்புறுத்தும் முறையிலும் கிறித்தவப் படைப்புகள் அமைந்துள்ளன. கிறித்தவம் வற்புறுத்தும் மன்னிப்பு, எளிமை, விட்டுக் கொடுத்தல், இரக்கம், அன்பு முதலிய தனி மனித அறங்களை உணர்த்தும் முறையிலும் கிறித்தவ உரைநடை இலக்கியங்கள் அமைந்துள்ளன.

    1.

    விவிலிய வசனத்தைக் கருவாகக் கொண்டு எழுதியுள்ள சிறுகதைக்குச் சான்று தருக.

    2.

    ‘எளிமையே இறைவன் விரும்பும் கோலம்’ என்பதை எந்தச் சிறுகதை உணர்த்துகிறது ?

    3.

    ‘பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது’ என்ற சிறுகதைத் தலைப்பில் பூக்கள் எதைக் குறிக்கின்றன ?

    4.

    ‘நல்ல சமாரியன்’ நாடகம் புலப்படுத்தும் செய்தி யாது ?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 14:44:13(இந்திய நேரம்)