Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
சிலேடையைச் சமய நல்லிணக்கத்துக்காகப் பயன்படுத்திய இஸ்லாமியப் புலவர் யார்? எவ்வாறு?
சதாவதானி செய்கு தம்பிப் பாவலர், எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகக் கடவுளைச் சுட்டும் ஒரு தொடர் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர் சிரமாறுடையான் என்று பாடினார். இதைச் சிரம் ஆறு உடையான் எனவும் சிரம்மாறு உடையான் எனவும் பிரிக்கலாம். சிரம் = தலை, தலைமை என்னும் பொருள்கள்; ஆறு = நதி, எண்(6) என்னும் பொருள்கள்; ஆறு = நெறி; சிரமாறு = சிரம்மாறு (மாறுதல்); சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கை ஆற்றை உடையவன் (சிவன்) தலை ஆறு உடையான் (முருகன்) தலை மாறி இருப்பவன் (யானைமுகன்) தலைமையான நெறிகளை உடையவன் (அல்லா, இயேசு, புத்தர்) இவ்வாறு அனைத்து மதக் கடவுளரையும் இரண்டு சொற்களுள் சிலேடையாக அமைத்துக்காட்டினார் புலவர்.