Primary tabs
-
தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களைச் சங்க இலக்கியம், அற
இலக்கியம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால இலக்கியம்
எனப் பாகுபாடு செய்யலாம். இவற்றுள் சங்க இலக்கியம்
தலைசிறந்தது. சங்க இலக்கியத்திற்கு அடுத்த நிலையில்,
சிறப்புடையதாக அற இலக்கியம் கருதப்படுகிறது. தமிழில் அற
நூல்களுக்கு முன்னோடியாகவும், முடிமணியாகவும் விளங்குவது
திருக்குறள். இதை இயற்றியவர் திருவள்ளுவர்.திருக்குறளின் ஒவ்வொரு பகுதியையும் பற்றிச் சிறப்பாக
அறிவதற்கு முன்னால், பொதுவாகத் திருக்குறள் அமைப்பு
எவ்வாறு இருக்கிறது, குறளின் உள்ளடக்கம் என்ன, இத்தகைய
ஒரு சிறந்த அற நூலைப்படைத்த திருவள்ளுவரின் சிறப்பு என்ன
என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனவே திருக்குறள்
அமைப்பைப் பற்றியும், வள்ளுவரைப் பற்றியும் உள்ள செய்திகள்
இப்பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.