தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.0

  • 3.0 பாட முன்னுரை

    பண்டைக் காலத் தமிழர் தனி மனிதனையும், சமுதாயத்தையும்,
    பாதுகாத்து வளர்க்கும் ஒழுக்க நெறியாக அறத்தைக் கருதினர்.
    அந்த அறத்தை இல்லறம் (இல்+அறம்), துறவறம் (துறவு+அறம்)
    என இரண்டாகப் பிரித்துள்ளார் வள்ளுவர். இரண்டிலும்
    இல்லத்திற்கே முதல் இடம் கொடுத்துள்ளார். இல்லறவியலில்
    உள்ள 20 உள் தலைப்புகளில் முதலில் இல்வாழ்க்கையைப்
    பற்றியே குறிப்பிடுகிறார். பின்னர் இடம் பெற்றிருக்கும்
    தலைப்புகளிலும்,     இல்வாழ்க்கைக்குத்     தொடர்புடைய
    கருத்துகளையே கூறியுள்ளார். எனவே, இல்லறம், என்ற பொதுத்
    தலைப்பில் கூறப்பட்டுள்ள, இல்வாழ்க்கை தொடர்பான
    வள்ளுவரின் கருத்துகள் இரண்டு பாடங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த முதல் பாடத்தில், இல்வாழ்க்கையில் ஈடுபடும்
    தனிமனிதனுக்குத் தேவையான பண்புகள்,     தேவைகள்
    சுட்டப்படுகின்றன. அடுத்து வரும் இரண்டாம் பாடத்தில்,
    இல்வாழ்வான் சமுதாயத்துடன் தொடர்பு கொள்ளும் போது
    பின்பற்ற வேண்டிய ஒழுகலாறுகள், கடமைகள் இயல்புகள் பற்றிய
    செய்திகள் குறிக்கப்படுகின்றன.

    இல்வாழ்க்கையில் தனிமனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுகலாறுகள்,
    கடமைகள் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடப்பகுதியில்
    கூறப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:58:57(இந்திய நேரம்)