தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.6

  • 3.6 தொகுப்புரை

    அறவழியில் வாழ்கின்ற வாழ்க்கையே இல்வாழ்க்கை. அந்த
    இல்வாழ்க்கைக்கு, நல்ல குடித்தனத்திற்கு ஒத்த பண்புகளும்,
    கற்பும் உடைய வாழ்க்கைத் துணை தேவை. அதோடு நல்ல
    புதல்வர்களைப் பெறுதல் ஒரு பெரும் பேறு. அத்தகைய
    புதல்வர்களுக்குத் தாய், தந்தையர் ஆகிய பெற்றோர் செய்ய
    வேண்டிய கடமைகள் உண்டு. புதல்வர்கள் பெற்றோருக்கு ஆற்ற
    வேண்டிய கடமைகளும் உண்டு.

    இல்வாழ்க்கையின் முக்கிய கடமைகளில் ஒன்று விருந்தோம்பல்.
    அதனை முக மலர்ச்சியுடன் செய்ய வேண்டும்.

    இல்வாழ்க்கையைப் பற்றிய வள்ளுவரின் மேற்குறிப்பிட்ட,
    கருத்துகள் இப்பாடத்தில் விரித்துரைக்கப்பட்டன.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - II


    1.


    தந்தைக்கு எது மகிழ்ச்சியை கொடுக்கும் என்று
    வள்ளுவர் கூறுகிறார்?

    2.

    தாய் எப்பொழுது மகிழ்ச்சி அடைவாள்?

    3.

    விருந்தினரின் மென்மையான உள்ளம் எதனுடன்
    ஒப்பிடப்படுகிறது? ஏன்?


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:59:22(இந்திய நேரம்)