தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • செய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம்

    (-1848)

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    இவர் சேக் அப்துல் காதர் அபீப் மகம்மது என்னும் இரத்தின வணிகரின் மகனாவர். காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் குணங்குடி மஸ்தானின் நண்பராகவும் சீடராகவும் இருந்தவர். சேனாப் புலவர் என்றும் புலவர் நாயகம் என்றும் இவர் அழைக்கப்பட்டு வந்துள்ளார். புலவர் நாயகம், அரபு, பார்ஸி, வடமொழி முதலியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் புத்தூ குஷ்ஷாம், குத்பு நாயகர் என்ற காவியங்களையும், திருக்காரணப் புராணத்தையும், நாகை அந்தாதி, திருமணிமாலை, கோத்திரமாலை, மக்காக் கலம்பகம், முனாஜாத்து விருத்தங்கள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.

    பதிப்பு நூல்கள்

    இவர் தாம் முதன் முதலில் சீறாப்புராணத்தைச் சென்னை வித்தியாவிலாச அச்சுக்கூடத்தில் கையேட்டுப்படிகளை ஆய்ந்து இடைச் செருகலின்றி 1842 இல் அச்சிட்டுப் பதிப்பித்தவராவர். இவர் அச்சிற் பதிப்பித்த வரலாறு நேரிசை ஆசிரியப்பாவில் தரப்பட்டுள்ளது. இதில் பாடல் சீர் பிரிக்கப்படாமலும் ஆனால் பாட்டுக்குப் பாட்டு இடம்விட்டும் அச்சிடப்பட்டுள்ளது. கடையில் பிழை திருத்தக் குறிப்பு விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:18:31(இந்திய நேரம்)