ஆதிச்சநல்லூர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • வி.கோவிந்த பிள்ளை

  (- 1890)

  முனைவர் த.கலாஸ்ரீதர்
  உதவிப்பேராசிரியர்
  ஓலைச்சுவடித்துறை

  இவர் திரிசிரபுரத்தில் பிறந்த வைணவர். வித்துவ ஜனசேகரர் கோவிந்த பிள்ளை என அழைக்கப்பட்டவர். திரிசிரபுர மலைக்கோட்டை மௌனசாமி மடத்து வேலாயுத முனிவரிடத்தில் தமிழ் பயின்றவர். இவரோடு உடன் பயின்றவர் திரிசிரபுர மகாவித்துவானாக விளங்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவார்.

  பதிப்பு நூல்கள்

  திரு கோவிந்த பிள்ளை – இராச மன்னார் கோயில் தலபுராணம், மேற்படி கோயில் அலங்காரக் கோவை என்னும் காண்டத்துக்கும், சடகோபரந்தாதி முதலிய நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். கம்பராமாயணம் முழுவதையும் அச்சிற் பதிப்பித்த பெருமை இவருக்கு உண்டு. நாகைப் புராணம் (1898) பதிப்பித்துள்ளார்.

Tags         :