முகப்பு |
வண்டு (தும்பி, சுரும்பு) |
17. குறிஞ்சி |
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, |
||
மால் கடல் திரையின் இழிதரும் அருவி |
||
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, |
||
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு |
||
5 |
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
|
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, |
||
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, |
||
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல், |
||
10 |
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
|
தீம் தொடை நரம்பின் இமிரும் |
||
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. | உரை | |
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
|
25. குறிஞ்சி |
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
||
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
||
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
||
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
||
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
||
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
||
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
||
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
||
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
||
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! | உரை | |
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|
27. நெய்தல் |
நீயும் யானும், நெருநல், பூவின் |
||
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
||
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
||
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
||
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
||
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
||
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
||
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
||
10 |
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
||
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
30. மருதம் |
கண்டனென்-மகிழ்ந!-கண்டு எவன்செய்கோ?- |
||
பாணன் கையது பண்புடைச் சீறியாழ் |
||
யாணர் வண்டின் இம்மென இமிரும், |
||
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின் |
||
5 |
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் |
|
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி- |
||
கால் ஏமுற்ற பைதரு காலை, |
||
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு, |
||
பலர் கொள் பலகை போல- |
||
10 |
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே. | உரை |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.-கொற்றனார்
|
35. நெய்தல் |
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
||
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
||
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
||
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
||
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
||
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
||
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
||
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
||
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
||
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! | உரை | |
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|
56. பாலை |
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ |
||
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய, |
||
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை, |
||
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் |
||
5 |
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, |
|
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ |
||
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, |
||
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, |
||
'ஏதிலாட்டி இவள்' எனப் |
||
10 |
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே | உரை |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி
|
97. முல்லை |
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா |
||
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, |
||
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், |
||
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; |
||
5 |
அதனினும் கொடியள் தானே, 'மதனின் |
|
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு |
||
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என |
||
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் |
||
தண்டலை உழவர் தனி மட மகளே. | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
|
105. பாலை |
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
||
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
||
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
||
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
||
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
||
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
||
வண்டு படு வான் போது கமழும் |
||
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. | உரை |
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
118. பாலை |
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் |
||
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், |
||
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் |
||
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், |
||
5 |
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, |
|
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை |
||
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய |
||
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி |
||
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, |
||
10 |
புது மலர் தெருவுதொறு நுவலும் |
|
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
||
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
||
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
176. குறிஞ்சி |
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
||
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
||
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் |
||
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!- |
||
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
||
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
||
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
||
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
||
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. | உரை | |
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
187. நெய்தல் |
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக, |
||
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய, |
||
பல் பூங் கானலும் அல்கின்றன்றே; |
||
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி, |
||
5 |
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய, |
|
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு |
||
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின், |
||
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு |
||
10 |
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே? | உரை |
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்
|
197. பாலை |
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே |
||
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; |
||
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ! |
||
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என, |
||
5 |
ஆழல், வாழி-தோழி!-நீ; நின் |
|
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, |
||
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, |
||
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் |
||
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் |
||
10 |
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் |
|
எயில் ஊர் பல் தோல் போலச் |
||
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே. | உரை | |
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்
|
235. நெய்தல் |
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல், |
||
அரவு வாள் வாய முள் இலைத் தாழை |
||
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் |
||
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம் |
||
5 |
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், |
|
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி, |
||
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!- |
||
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத, |
||
படு மணிக் கலி மாக் கடைஇ, |
||
10 |
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. | உரை |
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
|
238. முல்லை |
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங் |
||
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப, |
||
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், |
||
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய |
||
5 |
பருவம் செய்த கருவி மா மழை! |
|
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல் |
||
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன் |
||
உர உரும் உரறும் நீரின், பரந்த |
||
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட |
||
10 |
கனியா நெஞ்சத்தானும், |
|
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே. | உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்
|
245. நெய்தல் |
நகையாகின்றே-தோழி!-'தகைய |
||
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை |
||
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, |
||
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி, |
||
5 |
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், |
|
தெளி தீம் கிளவி! யாரையோ, என் |
||
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என, |
||
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி, |
||
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் |
||
10 |
தான் அணங்குற்றமை கூறி, கானல் |
|
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, |
||
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே | உரை | |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்
|
249. நெய்தல் |
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை |
||
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும், |
||
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் |
||
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர, |
||
5 |
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் |
|
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ, |
||
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத் |
||
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண், |
||
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி, |
||
10 |
அம்பல் மூதூர் அலர் எழ, |
|
சென்றது அன்றோ, கொண்கன் தேரே? | உரை | |
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்
|
270. நெய்தல் |
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத் |
||
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து |
||
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி, |
||
உருள் பொறி போல எம் முனை வருதல், |
||
5 |
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் |
|
பெருந் தோட் செல்வத்து இவளினும்-எல்லா!- |
||
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை |
||
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் |
||
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் |
||
10 |
கூந்தல் முரற்சியின் கொடிதே; |
|
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. | உரை | |
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.-பரணர்
|
277. பாலை |
கொடியை; வாழி-தும்பி!- இந் நோய் |
||
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென; |
||
மெய்யே கருமை அன்றியும், செவ்வன் |
||
அறிவும் கரிதோ-அறனிலோய்!-நினக்கே? |
||
5 |
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை |
|
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய |
||
தாறு படு பீரம் ஊதி, வேறுபட |
||
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்: |
||
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன் |
||
10 |
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், |
|
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு |
||
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே. | உரை | |
பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.-தும்பி சேர் கீரனார்
|
290. மருதம் |
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
||
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
||
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
||
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
||
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
||
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
||
தண் கமழ் புது மலர் ஊதும் |
||
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. | உரை | |
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
323. நெய்தல் |
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
||
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
||
ஆயமும் யானும் அறியாது அவணம் |
||
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
||
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
||
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
||
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
||
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
||
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
342. நெய்தல் |
'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு |
||
மதில் என மதித்து வெண் தேர் ஏறி, |
||
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின் |
||
சேரி சேரா வருவோர்க்கு, என்றும் |
||
5 |
அருளல் வேண்டும், அன்பு உடையோய்!' என, |
|
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்: |
||
யானே-எல்வளை!-யாத்த கானல் |
||
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த |
||
சென்னிச் சேவடி சேர்த்தின், |
||
10 |
'என் எனப் படுமோ?' என்றலும் உண்டே. | உரை |
குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புக்க தன் சொல் கேளாது விடலின், இறப்ப ஆற்றான் ஆயினான் என உணர்ந்து, ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது; தலைமக னுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம் புக்கலளாய், ஆற்றாது தன்னுள்ளே ெ
|
348. நெய்தல் |
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, |
||
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே; |
||
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி, |
||
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே; |
||
5 |
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் |
|
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே; |
||
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு |
||
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே: |
||
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்? |
||
10 |
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? | உரை |
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.-வெள்ளி வீதியார்
|
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? | உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|