11. அவலம் தீர்ந்தது

இதன்கண் : உருமண்ணுவா என்னும் அமைச்சனை உதயணகுமரனுக்குத் துணைவனாகத் தோழர்கள் அமைத்ததும், அவ்அமைச்
சன் அவ்உதயணனுடைய துயரத்தை
அகற்றுதற்கும் ஓதிஞானமுடைய ஒரு துறவியின்பால் சென்று குறிகேட்டற்கும் இலாவாண நகரத்தின் பக்கத்திலுள்ள மலைச்
சாரலிலே உண்டாட்டுத் தலைக்கீடாகச் சயந்தி நகர மக்களுடன் உதயணனை அழைத்துச் செல்லக் கருதி அதற்கு அவனை
உடம்படுவித்தலும் பிறவும் கூறப்படும்.
 




5

 விலாவணை ஒழியான் வீணைக் கைவினை
 நிலாமணிக் கொடும்பூண் நெடுந்தகை நினைந்து
 வைகல் தோறும் வான்மதி மெலிவின்
 பையுள் கொண்ட படிமை நோக்கி
 அரும்பெறல் அமைச்சரொடு ஒருங்குடன் குழீஇக்

 




10

 காவலன் அதிர்ந்த காலை மண்மிசைத்
 தாவில் பல்உயிர் தளர்ச்சி எய்தலின்
 எத்திறத்து ஆயினும் அத்திறம் அகற்றுதல்
 மந்திர மாந்தர் தந்திரம் ஆதலின்
 வத்தவர் கோமான்கு ஒத்த உறுதொழில்
 உத்தம மந்திரி யூகியின் பின்னர்
 அருமை சான்ற ஆய்பொருள் கேள்வி
 உருமண் ணுவாவிற்கு உறுகடன் இதுஎனத்
 தாழாத் தோழர் தன்மேல் வைத்தபின்

 
15

 வீழாக் காதலொடும் விரும்புவனன் ஆகிச்
 செய்பொருள் இதுவென ஐயம் தீர
 மன்னுயிர் ஞாலக்கு இன்னுயிர் ஒக்கும்
 இறைபடு துன்பம் குறைபட எறியும்
 மருந்தின் பிண்டம் தெரிந்தனிர் கேண்மின்

 
20




25

 தணப்பில் வேட்கை தலைத்தலை சிறப்ப
 உணர்ப்புஉள் ளுறுத்த ஊடல் அமிர்தத்துப்
 புணர்ப்புஉள் ளுறுத்த புரைபதம் பேணும்
 காமக் காரிகைக் காதல் மகளிர்
 தாமப் புணர்முலைத் தலைபிணி உறீஇ
 யாமக் கோட்டத்து அருஞ்சிறைக் கோடல்
 வணங்கா மன்ரை வாழ்வுகெட முருக்கி
 அணங்கரும் பெருந்திறை கொணர்ந்துமுன் இடுதல்
 பூமலர் பொதுளிய புனல்வரைச் சோலை
 மாமலைச் சாரலொடு கானம் காட்டுதல்

 
30




35

 யானையும் சுரிஉளை அரிமான் ஏறும்
 மானின் பெடையும் வாள்வரி உழுவையும்
 புள்ளும் மாக்களும் உள்உறுத்து இயன்ற
 நொய்ம்மர நெடும்புணை கைம்முதல் தழீஇக்
 கூறாடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி
 ஆறாடு ஆயமொடு அணிவிழவு அமர்தல்
 இன்னது ஒன்றினுள் என்னதொன் றாயினும்
 காமுறு கருமம் கால்வலை யாக

 


40




45

 ஏமுற ஒழியா ஏயர் மன்னனை
 உடுத்துவழி வந்த உழுவல் அன்பின்
 வடுத்தீர் கைவினை வாசவ தத்தையொ(டு)
 ஒருப்படுத்து ஒழியாது ஓங்குமலை மருங்கில்
 கடிகமழ் கானம் காணக் காட்டிப்
 படிவப் பள்ளியுள் பாவப் பெருமரம்
 விரத மழுவின் வேரறத் துணிக்கும்
 குறிக்கோள் உறுதவன் உண்மை கூறி
 ............................................................

 




50




55




60




65

 இன்றே அன்றியுந் தொன்றுவழி வந்த
 குன்றாக் கற்பின்எங் கோப்பெருங் கிழவோள்
 நித்திலம் பொதிந்த இப்பி போலத்
 திருவயிற்று அகவயின் உருவொளி அறாஅ
 நின்னைத் தாங்கிய நன்னாள் அமயத்துக்
 கண்நிழல் ஞாறிய காமர் பள்ளியுள்
 வெண்ணிலா முற்றத்து விரும்பி அசைதலின்
 ஒள்ஒளி அரத்தம் ஊனென நசைஇப்
 பல்வலிப் பறவை பற்றுபு பரிந்து
 விபுலம் என்னும் வியன்பெரும் குன்றத்(து)
 அருவரை அருகர் ஆய்நலம் கவினிய
 ஆலங் கானத்து அணியொடு பொலிந்த
 ஞாலம் காவல் நஞ்சென நீக்கிப்
 பாய்பரி இவுளி ஏயர் பெருமகன்
 தன்கண் கொற்றம் எல்லாம் தன்மகன்
 வென்றித் தானை விக்கிரன்கு அருளி
 மறுவில் நெஞ்சமொடு மாதவம் தாங்கி
 உறுபெருங் காட்சி ஓங்கிய படிவத்(து)
 அறம்புரி தந்தை பள்ளியது அருகர்ப்
 பறந்துசெல் சிம்புள் பையென வைத்தலும்

 




70

 கயல்ஏர் கண்ணி துயில்ஏற் றெழவே
 உயிர்போய் உறாமையின் உறுபுள் போக
 அச்ச வகையினும் அந்தரச் செலவினும்
 பொற்றொடி மாதர் பொறைநோய் கூர
 எல்லாக் கோளும் நல்வழி நொக்கத்
 திருமணி விளக்கம் திசைநின்று அழலப்
 பெருமணிப் பாவையின் பிறந்தனை கிடந்தோய்

 


75




80

 திருமெய் தழீஇ அருமைத் தாக
 நிகழ்ந்ததை அறியாள் கவன்றனள் இரங்க
 ஆத்திரை போந்த அருந்தவன் கண்டுதன்
 ஆத்த காதல்மகள் ஆவது அறிந்துசென்(று)
 அஞ்சல் ஓம்பென நெஞ்சகம் புகலப்
 பள்ளிக் கொண்டுபுக்கு உள்ளழிவு ஓம்பி
 அதிரா ஞாலத்து அரசுவீற் றிருந்த
 கதையுரைக் கெல்லாங் காரணன் ஆதலி்ன்
 புதைஇருள் அகற்றும் பொங்கொளி மண்டிலம்
 உதயம் இவர்தர உதித்தோன் மற்றுஇவன்
 உதயணன் ஆகெனப் பெயர்முதல் கொளீஇப்

 

85




90

 பரம இருடிகள் பல்லோர்க்குத் தலைவன்
 தருமம் தாங்கிய தவாஅக் கொள்கைப்
 பிரமசுந் தரன்எனும் பெரும்பெயர் முனிவன்குப்
 பழிப்பில் கற்பின் பரமசுந் தரியெனும்
 விழுத்தகு பத்தினி விரும்பிப் பெற்ற
 புத்திரன் தன்னொடு வத்தவர் தோன்றலும்
 இருவிரும் அவ்வழி மருவிவிளை யாடிச்
 செல்லா நின்ற சில்லென் காலை

 



95




100

 வெஞ்சின வேழ வெகுளி நீக்கும்     
 மந்திர நாமம் வந்துநீர் கன்மெனத்
 தேவ இந்திரனின் திருந்தப் பெற்ற
 ஆய்பெரு நல்லி்யாழ் அமைவர எழீஇக்
 கான யானையும் கரந்துறை புள்ளும்
 ஏனைய பிறவும் ஆனா உவகையொடு
 கேட்டவை எல்லாம் வேட்டவை விரும்பி
 வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன்
 வரத்தின் வல்லே வல்லை ஆகென
 உரைத்தம் முனிவன் உவந்தனன் கொடுத்துப்
 பெறலரும் பேரியாழ் பெற்ற வாறும்

 


105

 ஆர்வ நெஞ்சினன் ஆகிய கல்வி்
 நேர்தனக்கு இல்லா நெஞ்சுண் அமைதி
 யூகி நினக்குஇங்கு அடைக்கலம் என்பதும்
 போகிய புகழோன் பணிப்பக் கொண்டு
 தோழன் ஆகித் தோமில் கேள்வி
 யாழும் பாட்டும் அவைதுறை போகிக்
 கல்லா நின்ற சில்லென் காலத்து

 
110




115




120

 மைவரை மருங்கின் மடப்பிடி சூழத்
 தெய்வ யானை நின்றது நோக்கிக்
 கண்டே நின்று காதல் ஊர்தர
 மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
 தந்திர வகையும் காண்பல் யானென
 எழீஇயவண் இயக்கப் பொழிமத யானை
 வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன்
 பள்ளிக்கு உய்ப்ப நள்ளிருள் கூறும்
 பாகர் ஏறினும் தோற்கயிறு இடினும்
 நீமுன் உண்ணினும் நீங்குவல் யானென
 ஆகு பொருள்கேட்டு அறிவுற்று எழுந்து
 போதுங் காலை மாதவன் ஒருமகன்

 



125




130




135

 வீயாச் செங்கோல் விக்கிரன் ஒருநாள்
 எச்சம் இன்மையின் எவ்வம் கூராத்
 துப்புர வெல்லாம் துறப்பென் யானெனத்
 தற்பயந்து எடுத்தவன் தாள்நிழல் வந்தோன்
 மதலை யாகும்இப் புதல்வன் யாரெனச்
 செருமிகு சீற்றத்துக் குருகுலத்து அரசன்
 சாயாச் செங்கோல் சதானிகன் தேவி     
 அருமைசால் கற்பின் மிருகா பதியெனும்
 நுங்கை தன்னகர்க் கங்குற் கிடந்தோட்(கு)
 இன்னது நிகழ இவ்வயின் தந்த
 பொன்னணி பைம்பூண் புதல்வன் தான்இவன்
 ஐயாண்டு நிறைந்தனன் ஆதலின் இவனைத்
 தெய்வ ஞானம் திறம்படக் காட்டித்
 தன்நகர்க்கு உய்ப்பென் என்றலும் அடிகள்

 




140




145

 என்னுழைத் தம்மின் இறையென இயற்றித்
 தாயம் எல்லாந் தனக்குரித் தாக
 ஏயர் கொற்றம் இவன்வயின் கொடுத்துப்
 பெறலரும் பெருந்தவத்து உறுபயன் கொள்வலென்(று)
 ஆய்புகழ் முனிவனொடு தேவியை இரந்து
 செருமிகு குருசில்தன் மருமகன் தழீஇ
 நீல யானை நின்றது பண்ணிக்
 கோல எருநத்தங் குலவ ஏற்றி.
 வளநகர் புக்குத்தன் உளமனைக்கு எல்லாம்
 உதயணன் இறையென அறிவரச் சாற்றி
 வேத்தவை நடுவண் வீற்றுஇனி திருத்தி
 ஏயர் குலமுதற்கு இறைவன் ஆகி
 அவ்வழி மற்றுநீ வளர இவ்வழிப்

 

150




155

 பட்டதை அறியான் பயநிலங் காவலன்
 கட்டழல் எவ்வமொடு கடவுளை வினவக்
 கடும்புள் எதிர்ந்து காட்டகத்து இட்டதூஉம்
 நெடுந்தோள் அரிவை நின்னைப் பெற்றதூஉம்
 தகையுடை முனிவன் தலைப்பட் டதூஉம்
 வகையுடை நல்யாழ் வரத்தில் பெற்றதூஉம்
 விசையுடை வேழம் வணக்கும் விச்சையும்
 மாமன் கொண்டுதன் மண்நகர் புக்கதூஉம்
 ஏயர்க்கு இறையென இயற்றிய வண்ணமும்

 


160

 மாசில் கொற்றவன் மறுத்துஇவண் வரவும்
 ஆண்தகை மொய்ம்பினோர் அரசடிப் படுப்பதூஉம்
 ஈண்டுஇவண் வந்துநீ வீற்றிருப் பதூஉம்
 உள்ளுறுத்து ஓதியான் உள்ளம் உவப்ப
 முற்பால் நிகழ்ந்தவும் பிற்பாற் பெருக்கமும்
 இனையவை எல்லாம் இயற்படப் பிழையாது
 வினவிய பொழுதின் விரித்துரைத் தனன்ஒர

 
165




170

 பனுவ லாளனைப் பணிந்துகை கூப்பிக்
 கண்போல் காதல்நின் கழிபே ரமைச்சன்
 முன்போல் விளிந்து முடிக்குங் காரியம்
 உண்டு மாங்கொல் கண்டுவந் தோர்களைக்
 கண்டிலம் ஆதலின் பண்பொடு புணரக்
 கேட்டபின் அறிதும் யாமென வேட்ப
 இன்னவை கிளந்துபின் தன்வயின் தழீஇ

 



175




180

 என்கூற் றினையும் நுங்கூற் றாகத்
 தேன்சுவைக் கொளீஇ வேம்பின் ஊட்டும்
 மகாஅர்மருந் தாளரின் மறத்தகை அண்ணலை
 நகாஅர் பல்அவர் நலம்புகழ்ந்து ஏத்தும்
 விழுப்பம் எய்தி ஒழுக்கியல் போம்பி
 இழுக்காது இயன்ற இலாவா ணத்தயல்
 உண்டாட்டு அயர்தல் உறுதி உடைத்தென
 வண்டார் மார்பனை வலியுள் ளுறீஇ
 ஏழ்ச்சி வேண்டுஞ் சூழ்ச்சி கொடுக்கென

 




185
 உள்ள தோழரும் ஒருப்பட் டெய்தி
 வள்ளிதழ் நறுந்தார் வத்தவற்கு உறுகி
 முறைபட உணர்ந்த குறைவில் கட்டுரை
 கொள்ளக் கூறலும் வள்ளலும் விரும்பி
 நிதியக் கலத்தொடு பதிபல அருளிக்
 கொற்ற முரசிற் கோடணை கொட்டி
 ஓசைபோக் கினரால் உவகையின் மகிழ்ந்தென்,