Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
5)
காப்பிய நாயகர் பற்றிக் குறிப்புரை எழுதுக.
காப்பிய நாயகர் செய்யிது இப்ராகீம் ஆவார். இவர் நபிகள் நாயகத்தின் பதினெட்டாம் தலைமுறையில் தோன்றியவர். இவர் தனது 42ஆம் வயதில் அரபகத்திலிருந்து பாண்டிய நாடு வந்தார். இப்பகுதியில் 12ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியன் ஆட்சி செய்தான். இப்ராகீமும் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியில் பௌத்திர மாணிக்கப்பட்டினத்தை அரசாட்சி செய்தார். இசுலாமிய நெறியைத் தமிழகத்தில் பரவச் செய்தார். கீழக்கரையின் பக்கத்திலுள்ள ஏர்வாடியில் சமாதி ஆகியுள்ளார்.