Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
கடலில் மூழ்கும் கலம் என்னும் உவமையினைப் புலவர் எவ்வாறு விளக்கியுள்ளார்?
அன்று அரபுநாடு பாவங்கள் அதிகமான நாடாக இருந்தது. மக்கள் அலை கடலில் அகப்பட்ட துரும்புபோலத் துன்புற்றனர். அறியாமையாலும், இனப்பிரிவாலும் சண்டையிட்டனர். பெண் குழந்தையை உயிரோடு புதைத்தனர். இத்தகைய வாழ்க்கையைக் கடலில் மூழ்கும் கலம்போல இருந்தது என்னும் உவமையால் குறிப்பிடுகிறார்.