Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
காந்தியச் சமுதாய நெறிகளுள் ஒன்று தீண்டாமை ஒழிப்பு. தியாக பூமியில் சம்பு சாஸ்திரி சேரி வாழ் மக்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காகத் தமது மாட்டுக் கொட்டகையில் தங்குவதற்கு இடமளித்தார். இதனால் ஊர் அந்தணர்கள் ஒன்று சேர்ந்து அவரை அந்தணர் சாதியிலிருந்து விலக்கி விட்டனர். சேரிவாழ் மக்களைத் தீண்டத்தகாதவர்களாக அந்தணர்கள் ஒதுக்கி வைத்தனர் என்பதையும் அறியலாம்.