தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-4.6-தொகுப்புரை

  • 4.6 தொகுப்புரை

    கல்கி பல வரலாற்றுப் புதினங்களையும், சமூகப் புதினங்களையும் எழுதியிருந்தாலும் அவருடைய தியாகபூமி என்ற ஒரு புதினத்தின் பல்வேறு சிறப்பியல்புகள் மட்டும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. கல்கி ஒரு சிறந்த சமூகப் புதின ஆசிரியர் என்பது இப்பாடத்தின் மூலம் புலனாகின்றது. கல்கி தம்முடைய புதினத்தில் அக்காலச் சமுதாயத்தை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

    இப்புதினத்தின் மூலமாகக் கல்கியின் மொழிநடை எளிமையானது என்பதையும், வருணனை நயம் மிக்கது என்பதையும் அறிந்து கொள்ளலாம். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார் என்பதையும் அறியலாம். கல்கியின் புதினப் புலமைக்குத் தியாக பூமி ஓர் எடுத்துக்காட்டு என்பதில் ஐயமில்லை. தியாகபூமி திரைப்படமாக்கப் பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1
    தியாகபூமி - தலைப்புப் பொருத்தம் எழுதுக.
    2

    கல்கியின் நகைச்சுவை நடை பற்றி எழுதுக.

    3

    நான்கு விதமான வருணனைகளைக் குறிப்பிடுக.

    4

    தியாகபூமியில் காணப்படும் உவமைகளை எழுதுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 16:41:55(இந்திய நேரம்)