Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
பெண் மேம்பாட்டுக்குக் கிறித்தவப் புதினங்களின் பங்களிப்பினை விளக்குக.
வேதநாயகரின் பிரதாப முதலியார் சரித்திரமும் சுகுண சுந்தரியும் பெண் மேம்பாட்டைக் கருவாகக் கொண்டவை. பெண்கல்வியை வற்புறுத்தியும் வரதட்சணை, குழந்தைத் திருமணம், கைம்மைத்துயர் ஆகியவற்றை எதிர்த்தும் இந்நூல்கள் பேசுகின்றன. ஞானாம்பாள், சுந்தரத்தண்ணி பாத்திரங்களும், சுகுணசுந்தரி கதையும் பெண்ணுரிமைகள், பெண்கல்வி ஆகியவை பற்றிப் பெரிதும் பேசுகின்றன.