தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    மிகுராசு மாலை - நூற்குறிப்பு வரைக.

    பல வண்ண மலர்களால் தொடுக்கப்படும் மாலை போல, பலவகை யாப்பு வகையினால் தொடுக்கப்படும் இலக்கியம் மாலை இலக்கியம் எனலாம். மிகுராசு என்பது அறபு மொழிச் சொல்லாகும். இதற்கு உயருதல், விண்ணேற்றம் பெறுதல் என்று பொருள். இஸ்லாம் சமயத் தீர்க்கதரிசியாகிய நபிகள் பெருமானார் புறாக் என்னும் மின்பரி மேலேறி விண்ணேற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுவது மிகுராசு மாலையாகும். இந்நூல் நெல்லை மாவட்டத்திலுள்ள மங்கை நகர் என்னும் ஊரினரான ஆலிப்புலவரால் இயற்றப்பட்டது. பன்னிரண்டு இயல்களும் கடவுள் வாழ்த்து உட்பட 743 செய்யுட்களும் கொண்டுள்ளது. இவ்விலக்கியத்தின் காலம் கி.பி. 1590ஆம் ஆண்டாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-10-2017 12:23:41(இந்திய நேரம்)