Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
சமயவரலாறு என்பது யாது?
சமய வரலாறு என்பது ஒவ்வொரு சமயமும் இவ்வுலகில் தோன்றி வளர்ந்த வரலாற்றுப் பின்னணியே ஆகும். இவ்வரலாற்றுப் பின்னணியில் அந்தந்தச் சமயங்களின் நிறுவுநர்கள் முன்னணி வகிப்பர். காலத்தாக்கத்தால் அவ்வப்போது வரும் சிற்சில மாற்றங்கள் - தேற்றங்களைத் தந்தவர்களும் அந்தச் சமய வரலாற்றில் இடம் பெற்று, சமய வரலாறு விரிவாக்கம் பெறும். இவ்வகையில் நோக்கும் பொழுது சமய வரலாறு என்பது சமயத் தத்துவங்கள் அடங்கிய சமயச் சான்றோர்களின் வரலாறே எனலாம்.