Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
இஸ்ரேலிய, யூத, கிறித்தவவ இஸ்லாமிய சமயங்கட்கு மூலப்பிதா யார்? அவரை இறைவன் ஆட்கொண்ட விதத்தைப் புலப்படுத்துக.
இஸ்ரேலிய, யூத, கிறித்தவ இஸ்லாமிய சமயங்கட்கு மூலப்பிதா இப்ராஹிம் நபி ஆவார். இவர் தென் ஈராக்கிலுள்ள ஊர் என்னும் பேரூரில் பிறந்தார். அரூபியாகத் திகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே முற்றிலும் சரணடைந்தவராக வாழ்ந்தார். சிலை வணக்கத்தை வெறுத்தார். விவரம் அறிந்த மன்னன் நமுறூது ஆணையால் இவர் நெருப்புக் குண்டத்தில் கிடத்தப்படும் போது பெருமழை பெய்து நெருப்பை அணைத்தது. அதே சமயம் திரள் திரளாகக் கொசுக்கள் எங்கிருந்தோ பறந்து வந்து நமுறூது மன்னன் மூக்கினுள் புகுந்து இறப்பிற்குள் ஆழ்த்தியது. அவ்வாறே இப்ராஹிம் நபியை ஏற்காதோறும் மடிந்து வீழ்ந்தனர். இப்ராஹிம் நபி தன்தலைமகனான இஸ்மாயில் நபியை இறைவழியில் பலியிடக் கனவு கண்டார். மகனை அழைத்துக் கொண்டு மோரியா மலைக்குச்சென்றார். மகனின் கை கால்களைக் கட்டிக் கிடத்தி விட்டு தன் கண்களைக் கட்டிக்கொண்டு கத்தியை மகனின் கழுத்தில் செலுத்தினர். இரத்தம் பீரிடுவதை உணர்ந்தார். கண்களைத் திறந்து பார்த்த போது மகன் சேதமின்றி அருகில் நின்றிருந்தான். மகனுக்குப் பதிலாக ஆடு ஒன்று அறுபட்டுக் கிடந்தது. அது கண்டு உவந்தார். இவ்வகையில் இறைவன் அவரை ஆட்கொண்டான்.