Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
மிகுராசு மாலையில் விவரித்துள்ள இஸ்லாம் சமயத் தத்துவங்கள் சிலவற்றைச் சுருக்கித் தருக.
இஸ்லாம் சமயத்தவருக்கு வரையறுக்கப்பட்ட கட்டாயக் கடமைகளில் கலிமா, தொழுகை, நோன்பு ஆகிய மூன்றும் மிகுராசு மாலையில் காட்டப்பட்டுள்ளன. கலிமா என்பதற்கு மொழிதல் என்று பொருள். தொழுகை - இஸ்லாம் சமயத்தவர் தினம் ஐந்து வேளை இறைவழிபாடு செய்ய வேண்டும். இது கட்டாயக் கடமை ஆகும். நோன்பு - முப்பது நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயக் கடமையாகும்.