Primary tabs
-
தன் தலைவன் தனக்கே உரிமை உடையவன். அவன் தனக்கே
முழுமையாக வேண்டும், கனவிலும் அவன் பிறரை நினைக்கக்
கூடாது என்ற உள் உணர்வு தலைவிக்கு உண்டு. இந்த உணர்வினை
அவள் பல இடங்களில் வெளியிடுகிறாள். இதனால் தலைவன் மீது
ஐயம் கூட ஏற்படுகிறது.
தலைவனோடு தலைவி ஊடல் கொள்கிறாள். ஊடலுக்கு
அடையாளமாக, அவனிடம் பேசவில்லை. அவள் தன்னோடு
பேசவில்லை, ஏதோ கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த
தலைவன், அவள் கோபத்தைத் தணித்துப் பேச வைக்க
முயற்சிக்கிறான். எனவே அவன் தும்முகிறான். உடனே தலைவி, ‘நீ
நீடு வாழ்க’ என்று வாழ்த்தினாள். யாராவது தும்மினால் ‘நீடு
வாழ்க’ என்று வாழ்த்துவது தமிழர் மரபு. அந்த வகையில் தன்
ஊடலையும் மறந்து வாழ்த்தினாள். அப்பொழுது அவளுக்கு
இன்னொன்று நினைவுக்கு வருகிறது. பிறர் யாராவது நம்மை
நினைத்தால் தான், தும்மல் வரும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
அது, தலைவியின் நினைவுக்கு வருகிறது. தலைவன் மீது சந்தேகம்
வருகிறது. உடனே தலைவனைப் பார்த்து, ‘தும்மினீரே! யாரை
நினைத்துத் தும்மினீர்!’ என்று கேட்டு அழத் தொடங்கி விட்டாள்.
தலைவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாத ஓர் இக்கட்டான
நிலை.
(வழுத்தினாள் = வாழ்த்தினாள், உள்ளி = நினைத்து)ஊடலைத் தணிக்க எடுத்த முயற்சி, இன்னொரு சிக்கலை
ஏற்படுத்தும் என்று தலைவன் கொஞ்சம் கூட நினைத்துப்
பார்க்கவில்லை. இந்தப் புதிய சிக்கல் வரும் என்று தெரிந்திருந்தால்
தலைவன், தும்மியிருக்கமாட்டானோ?ஆனால் தலைவியின் இந்தச் செயலிலிருந்து என்ன தெரிகிறது? தன்
கணவன் தனக்கே உரியவன். தன்னைத் தவிர பிற யாரையும்
மனத்தால் கூட அவன் நினைக்கக் கூடாது என்ற அவள் எண்ணம்
தெரிகிறது. இல்லையா?• தும்மல் தரும் துன்பம்
தும்மினால் தலைவி சந்தேகப்படுகிறாள். எனவே, தும்மலைத்
தவிர்க்க நினைக்கிறான் தலைவன். ஆனால், தும்மல் வந்து விட்டது.
என்ன செய்வது? அதை அடக்க முயன்றான். தலைவி அதையும்
பார்த்துவிட்டாள். உடனே அழத் தொடங்கினாள். தலைவனுக்கு
ஒன்றும் புரியவில்லை. ‘உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை
நினைக்கிறார்கள். அதை என்னிடம் மறைப்பதற்காகத்தான் தும்மலை
அடக்குகிறீர்கள்’ என்று சொல்லி, தன் அழுகையைத் தொடர்ந்தாள்.
(செறுப்ப = தடுக்க, நுமர் = உம்முடையவர், உள்ளல் = நினைத்தல்)தன் உயிருக்கும் மலோக நேசிக்கப்படும் தலைவன், தன்னைத் தவிர
பிற யாரையேனும் நினைப்பானோ? விரும்புவானோ? என்ற ஐயம்
தலைவிக்கு இருக்கிறது. தனக்கு உரிமையான தலைவன் பிறர்
வயப்பட்டு விடுவானோ என்ற ஒரு பயம், அவளை இவ்வாறு
செய்யத் தூண்டுகிறது. இது தலைவன் மீது தலைவி கொண்ட மிகுந்த
பற்றின் வெளிப்பாடேயாகும்.
தலைவன் தலைவி இருவரிடையே சொல் / செயல் -
எதிர்ச்சொல் / எதிர்ச்செயல் என அடுத்தடுத்து
பரிமாறப்பட ஒரு சிறிய காட்சியையே வள்ளுவர் உங்கள்
மனத்திரையில் அரங்கேற்றுகிறார். காதல் வாழ்வில் நிகழும்
நிகச்சிகளை இவ்வாறு சிறு நாடகங்களாக இரண்டே
வரிகளில் இயற்றியிருக்கிறார் வள்ளுவர். பாடத்தின்
ஏனைய குறள்களிலும் இத்தகைய நாடக
நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதை அடையாளம்
காணுங்கள்!