தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.8-தொகுப்புரை

  • 2.8 தொகுப்புரை


        அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றை கொண்டு பேசத்
    தயங்கும் தலைவி, தன் விருப்பத்தை மறைமுகமாகத் தலைவனுக்கு
    உணர்த்துகின்றாள். தலைவி தலைவனோடு வாழ்ந்த களவு
    ஒழுக்கத்திலும், கற்பு ஒழுக்கத்திலும், அவன் மீது கொண்ட மிகுந்த
    அன்பினை,     அவளது     சொற்களாலும்,     செயல்களாலும்
    வெளிப்படுத்துகிறாள். தலைவன்     தன் கண்ணினுள்ளும்,
    நெஞ்சினுள்ளும் நிலைத்துள்ளான். எனவே, மை தீட்டலையும்,
    சூடான உணவு அருந்துதலையும் புறக்கணித்தாள்.

        இவற்றிலிருந்து, தலைவிக்குத் தலைவன் மீதுள்ள மிகுந்த அன்பு,
    எப்பொழுதும் அவனைச் சந்தித்து மகிழ வேண்டும் என்ற விருப்பம்,
    அவளது மனநிலை, அவளது உள் உணர்வுகள் ஆகிய பண்புகள்
    வெளிப்படும்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1. தலைவனைப் பார்க்க வேண்டும் என்ற தன்
      ஆசையைத் தலைவி எவ்வாறு வெளியிடுகிறாள்?
    1. தலைவனைச் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே
      தலைவி தன் உள் உணர்வினை எவ்வாறு
      வெளிப்படுத்துகிறாள்?
    1. தலைவியின் உள் அன்பு எவ்வாறு மலரின்
      மணத்துடன் ஒப்பிடப்படுகிறது ?
    1. தலைவன் மீது தலைவி ஐயம் கொள்ளுவதற்குரிய
      காரணம் யாது?
    1. தும்மல் தலைவனுக்கு எத்தகைய துன்பத்தைக்
      கொடுத்தது?
    1. தலைவனின் பிரிவைத் தான் தாங்கிக் கொள்ள
      இயலாது என்பதனைத் தலைவி எவ்வாறு
      வெளிப்படுத்துகிறாள்?
    1. தூக்கம் இல்லாமையின் காரணம் யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:52:11(இந்திய நேரம்)