தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimeagalai


  24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை

 
 
 

[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு

 
அடைந்த பாட்டு ]
 
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல்முது கணிகைதன் சூழ்ச்சியின் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி
5
மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்துஆங்கு,
அரவுஏர் அல்குல் அருந்தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும்,
ஆயிரம் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
10
மாஇரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்,
ஆங்குஅவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்,
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் தன்முன்
உருப்பசி முனிந்த என்குலத்து ஒருத்தியும்,
15
ஒன்று கடைநின்ற ஆறிரு பதின்மர்இத்
தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள்முதல்
யான்உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந் தேவி மாதர் யாரினும்,
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
20
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்,
பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்திசென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்.
25
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்
உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டுப்
பொங்குதிரை உலாவும் புன்னையங் கானல்
கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா
30
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற
பூநாறு சோலை யாரும்இல் ஒருசிறைத்
தானே தமியள் ஒருத்தி தோன்ற,
இன்னள் ஆர்கொல் ஈங்குஇவள் என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்
35
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உற்றுஉணர் உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
40
மலர்வாய் அம்பின் வாசம் கமழப்
பலர்புறம் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப
ஒருமதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொருவரு பூங்கொடி போயின அந்நாள்
யாங்குஒளித் தனள்அவ் இளங்கொடி என்றே
45
வேந்தரை அட்டோன் மெல்இயல் தேர்வுழி,
நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறிச்
சலத்தில் திரியும்ஓர் சாரணன் தோன்ற,
மன்னவன் அவனை வணங்கி முன்நின்று
என்உயிர் அனையாள் ஈங்குஒளித் தாள்உளள்
50
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்
சொல்லுமின் என்று தொழஅவன் உரைப்பான்:
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டுஅறி வுடையேன் பார்த்திப கேளாய்:
நாக நாடு நடுக்குஇன்று ஆள்பவன்
55
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாச மயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந்நாள்
இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக்
கருவொடு வரும்எனக் கணிஎடுத்து உரைத்தனன்
60
ஆங்குஅப் புதல்வன் வரூஉம் அல்லது
பூங்கொடி வாராள் புலம்பல் இதுகேள்:
தீவகச் சாந்தி செய்யா நாள்உன்
காவல் மாநகர் கடல்வயிறு புகூஉம்
மணிமே கலைதன் வாய்மொழி யால்அது
65
தணியாது இந்திர சாபம்உண் டாகலின்.
ஆங்குப்பதி அழிதலும் ஈங்குப்பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய் மெய்எனக் கொண்டுஇக்
காசுஇல் மாநகர் கடல்வயிறு புகாமல்
வாசவன் விழாக்கோள் மறவேல் என்று
70
மாதவன் போயின அந்நாள் தொட்டும்இக்
காவல் மாநகர் கலக்குஒழி யாதால்
தன்பெயர் மடந்தை துயர்உறு மாயின்
தன்பெருந் தெய்வம் வருதலும் உண்டுஎன
அஞ்சினேன் அரசன் தேவிஎன்று ஏத்தி
75
நல்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருகென, இராசமா தேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும்என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமைஇல் வாழ்க்கை
80
புலைமைஎன்று அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும்என்று ஈங்குஇவை சொல்வுழி,
மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத்
துணிகயம் துகள்படத் துவங்கிய வதுபோல்
85
தெளியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளிஎறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி
அறவணர் அடிவீழ்ந்து ஆங்குஅவர் தம்முடன்
மறவேல் மன்னவன் தேவிதன் பால்வரத்
தேவியும் ஆயமும் சித்திரா பதியும்
90
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்
எழுந்துஎதிர் சென்றுஆங்கு இணைவளைக் கையால்
தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க
அறிவுஉண் டாகஎன்று ஆங்குஅவன் கூறலும்,
இணைவளை நல்லாள் இராசமா தேவி
95
அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டித்
திருந்துஅடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்
யாண்டுபல புக்கநும் இணைஅடி வருந்தஎன்
காண்தகு நல்வினை நும்மைஈங்கு அழைத்தது
நாத்தொலைவு இல்லாய் ஆயினும் தளர்ந்து
100
மூத்தஇவ் யாக்கை வாழ்கபல் ஆண்டுஎன,
தேவி கேளாய் செய்தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ்கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இதுகேள்:
105
பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றுஎன வகுத்த இயல்புஈ ராறும்
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர்
110
அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர்
பேதைமை என்பது யாதுஎன வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல்
115
உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
அலகுஇல் பல்உயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்றுஇரு வகையால்
120
சொல்லப் பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை என்பது யாதுஎன வினவின்
ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய்
125
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்,
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
130
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக்
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்,
135
நல்வினை என்பது யாதுஎன வினவில்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் மாகி
140
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர்
புரைதீர் நல்அறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப்பு உணர்ந்த மணிமே கலைநீ
பிறஅறம் கேட்ட பின்னாள் வந்துஉனக்கு
145
இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்துஏர் நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றுஅவன் எழுதலும், இளங்கொடி எழுந்து
நன்றுஅறி மாதவன் நல்அடி வணங்கித்
தேவியும் ஆயமும் சித்திரா பதியும்
150
மாதவர் நல்மொழி மறவாது உய்ம்மின்
இந்நகர் மருங்கின்யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்குஇவள் வரும்கூற்று என்குவர்
அடைந்துஅதன் பின்னாள்
 
மாசுஇல் மணிபல் லவம்தொழுது ஏத்தி
155
வஞ்சியுள் புக்கு மாபத் தினிதனக்கு
எஞ்சா நல்அறம் யாங்கணும் செய்குவல்
எனக்குஇடர் உண்டுஎன்று இரங்கல் வேண்டா
மனக்குஇனி யீர்என்று அவரையும் வணங்கி,
வெந்துஉறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த
160
அந்தி மாலை ஆயிழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகுஒளிக் கந்தமும் ஏத்தி வலம்கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை
இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர்
165
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து
ஆங்குவாழ் மாதவன் அடிஇணை வணங்கி,
இந்நகர்ப் பேர்யாது இந்நகர் ஆளும்
மன்னவன் யார்என மாதவன் கூறும்
நாக புரம்இது நல்நகர் ஆள்வோன்
170
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்
ஈங்குஇவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குஉயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்
உள்நின்று உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத்
175
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்
நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தான்என்.
 
 

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை முற்றிற்று.
 

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:31:22(இந்திய நேரம்)