தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • தொண்டி ஆமூர்ச் சாத்தனார்

  முனைவர் இரா.காமராசு
  உதவிப்பேராசிரியர்
  இலக்கியத்துறை


  தொண்டி ஆமூர்ச் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் அகநானூறு 169 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தொண்டி என்னும் ஊர் ஒரு துறைமுகப் பட்டினம். இந்தத் தொண்டியை அடுத்திருந்த ஆமூரில் வாழ்ந்தவர் இந்தப் புலவர்.

  பொருள் தேடச் செல்லும் தலைவன் இடைச் சுரத்தில் தன் காதலியை நினைத்துப் பார்க்கிறான். சுரத்தில் மரம் கரிந்து போயிருக்கும் நிலத்தின் பயன்கள் வாடிப்போயிருக்கும், வெயில் சுட்டெரிக்கும். எங்கும் அழல் என்னும் தணல் பறப்பது போல் இருக்கும். புலி யானையைத் தொலைத்து உண்ட மிச்சில் கிடைக்கும். அதன் துண்டங்களை வெட்டி உமணர் கடலில் விளைவித்த அமிழ்து என்னும் உப்பிலிட்டு ஞெலி கோலில் கோத்துக் காய வைத்துக்கொள்வர். அதனைச் சோற்று உலையில் போட்டுச் சமைத்து உண்பர்.

  தலைவியின் மேனி பசலை பாய்ந்திருக்கும் பொழுது இறங்கும் மாலை நேரத்தில் தன் நெற்றியில் விரலை வைத்துக் கொண்டு என்னை நினைப்பாள். கயல்மீன் நீரை உமிழ்வது போல அவளது கண் கண்ணீரைக் கொட்டும் அவளது தோள் வாடிப்போயிருக்கும்.

  கண்ணில், அழும் நீர் வரும் காட்சி கயல்மீன் நீரை உமிழ்வது போல் இருக்கும் என அகநானூறு-169 ஆம் பாடலில் நயமாகப் பாடிச் செல்கிறார் சாத்தனார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:19:45(இந்திய நேரம்)