6. தெய்வச் சிறப்பு

இதன்கண் : சான்றோர் உதயணன்பால் சென்று இன்பமாடம் புகுந்து திருக்கோயில் வழிபடுதலும் நகர்வலம் செய்தலும், மணம் புரிந்துகொண்ட மன்னர் மக்கட்கு  இன்றியனமயாக் கடமைகள் ஆகும் என்று அறிவுறுத்தலும், அவற்றிற்கு அவன் உடம்படுதலும், உதயணன் திருக்கோயிற்குச் செல்லுதலும், ஆண்டுப்படு நிகழ்ச்சிகளும், அருகன் கோயில் மாண்பும், அக்கடவுள் அரியணையின் மாண்பும், அக்கோயிலின்கண் உதயணன் வாசவதத்தையோடும் சுற்றத்தாரோடும் ஒருங்கு புகுந்து இறைவன் திருமுன்நின்று நெஞ்சுருகி வாழ்த்தப் பரவுதலும் பிறவும் கூறப்படும்.
 




5




10

 இன்புற்று இருவரும் இயைந்துஉடன் போகிய
 நன்பெரும் காலை நல்லோர் குழீஇக்
 கண்கெழு பெருஞ்சிறப்பு இயற்றிப் பண்புளிப்
 பூப்புரி  மாடத்துப் போற்றெனப் புகாஅத்
 தேவ குலத்தொடு திருநகர் வலஞ்செயல்
 காவல குமரர் கடிநாள் கடன்என
 வென்றி முழக்கம் குன்றாது வழங்குநர்
 முன்னர் நின்று முன்னியது முடிக்கஎன
 மங்கல மரபினர் மரபில் கூறக்
 காவல குமரனும் கடிநகர் வலஞ்செய
 மேவினன் அருள மேவரப் புனைந்த

 



15




20

 பசும்பொன் அலகில் பவழத் திரள்கால்
 விசும்புஇவர் மதிஉறழ் வெண்பொன் போர்வைத்
 தாம நெடுங்குடை தகைபெறக் கவிப்பக்
 காமர் கோலம் காண்மின் நீரென
 ஏமச் செங்கோல் ஏயர் பெருமகன்
 செம்பொன் செருப்பில் சேவடி இழிந்து
 வெண்பூ நிரந்த வீதியுள் இயங்கி
 நகர்வலம் கொள்ளும் நாள்மற்று இன்றுஎனப்
 பகல்அங் காடியில் பல்லவர் எடுத்த

 




25

 பல்வேறு கொடியும் படாகையும் நிரைஇ
 ஆறுபுகு கடலின் மாறுதிரை மானக்
 கண்ணுற்று நுடங்கிக் கார்இருள் கழுமி
 விண்ணுற்று இயங்கும் வெய்யோன் அழுங்க
 மரீஇய மாந்தரும் மனைகெடுத்து உழன்றுஇது
 பொரீஇக் காணின் போக பூமிக்(கு)
 இருமடங்கு இனிதெனப் பெருநகர் உற்ற
 செல்வக் கம்பலை பல்லூழ் நிறைந்து
 மாண்பதி உறையுநர் காண்பது விரும்பித்

 
30




35

 தன்னின் அன்றியும் தமக்கு வழிவந்த
 குலப்பெருந் தெய்வம் கூப்புத லானும்
 அரிமலர்க் கண்ணியொடு அகநாட்டுப் பெயரும்
 கருமக் காலை பெருவரம் பெறுகென
 உள்ளகத்து உணர்ந்ததை உண்மை யானும்
 சுருக்கம் இன்றிச் சுடர்ப்பிறை போலப்
 பெருக்கம் வேண்டிப் பெருநில மன்னவன்
 ஆரணங்கு ஆகிய அறிவர் தானத்துப்
 பூரணப் படிமை காண்ட லானும்
 இன்னவை பிறவும் தன்னியல் ஆதலின்

 
40




45

 ஆணப் பைம்பொன் அடித்தொடைப் பலகைக்
 கோணங் கொண்ட கொளூஉத்திரள் சந்துமிசை
 உறுப்புப் பலதெரிந்த சிறப்பிற்று ஆகிச்
 செம்பொன் இட்டிகைத் திண்சுவர் அனமத்துக்
 குடமும் தாமமும் கொழுங்கொடிப் பிணையலும்
 அடர்பூம் பாலிகை அடிமுதல் குளிஇப்
 புடைதிரண்டு அமைந்த போதிகைப் பொன்தூண்
 வேண்டக மருங்கில் காண்தக நிறீஇ

 


50

 வரிமான் மகர மகன்றில் யானை
 அரிமான் அன்ன மணிநிற எண்குஇனம்
 குழவிப் பாவையொடு அழகுபெறப் புனைந்து
 பொருவில் பூதத்து உருவுபட வரீஇ

 
 

 மரகத மாலை நிரல்அமைத்து இரீஇ
 எரிமலர்த் தாமரை இலங்கொளி எள்ளிய
 திருமணிக் கபோதம் செறியச் சேர்த்திப்

 
55




60




65

 பத்திப் பல்வினைச் சித்திரக் குலாவின்
 ஒத்துஅமைத்து இயன்ற சத்திக்கொடி உச்சி
 வித்தக நாசி வேண்டிடத்து இரீஇத்
 தூண்மிசைக்கு ஏற்ப ஏண்முள் அழுத்திய
 போதிக்கு ஒத்த சாதிப் பவழக்
 கொடுங்காழ்க் கோவைக் கடுங்கதிர்ப் பணித்திரள்
 அவ்வயிற் கேற்றுக் கவ்விதின் பொலிந்து
 நீல உண்மணிக்கோலக் குழிசி
 புடைத்துளைக்கு ஏற்ற இடைத்துளை யாப்பின்
 அமைத்துஉருக்கு இயற்றிய ஆடகப் பொன்னின்
 விசித்திரத்து இயற்றிய வித்தக வேயுள்

 




70




75

 தீஞ்சுவை நெல்லி்த் திரள்காய்த் தாரையுள்
 கூப்புபு பிணித்த கூடப் பரப்பில்
 கட்டளை அமைத்துக் கண்குஇனி தாகி
 எட்டுவகைப் பெருஞ்சிறப்பு ஏற்ப எழுதி
 ஒட்டிய வனப்பினோர் ஓட உத்தரத்து
 ஒண்மணிப் புதவில் திண்ணிதின் கோத்த
 பொறிநிலை அமைந்த செறிநிலைப் பலகை
 வள்ளியும் பத்தியும் உள்விரித்து எழுதி
 ஒள்ஒளி திகழும் வெள்ளிக் கதவின்
 பக்கம் வளைஇய நித்திலத் தாமம்
 சித்திர மாலையொடு சிறந்துஒளி திகழ
 வளஇற்கு அமைந்தவாயிற் றாகி

 


80

 நிலவிற்கு அமைந்த நிரப்பம் எய்தி
 மண்ணினும் மரத்தினும் மருப்பினும் அன்றிப்
 பொன்னினும் மணியினும் துன்எழில் எய்தி
 அடியிற்கு ஏற்ற முடியிற் றாகி
 அங்கண் மாதிரத்து அணிஅழகு உமிழும்
 பைங்கதிர்ச் செல்வனொடு செங்கதிர்க்கு இயன்ற
 வால்ஒளி மழுங்க மேல்ஒளி திகழப்

 
85

 பரூஉப்பணைப் பளி்ங்கில் பட்டிகை கொளீஇ
 வேல்தொழில் பொலிந்த மாற்றுமருங்கு அமைத்துக்
 காம்பும் கதிரும் கூம்புமணிக் குமுதமும்
 பாங்குற நிரைத்த பயிற்சித்து ஆகிப்

உரை
 

90




95

 பத்திச் சித்திரப் பன்மணிக் கண்டம்
 வித்தக வண்ணமொடு வேண்டிடத்து அழுத்தி
 அரும்பும் போதும் திருந்துசினைத் தளிரும்
 பெருந்தண் அலரொடு பிணங்குபு குலாஅய்
 உருக்குறு பசும்பொன் உள்விரித்.தோட்டிக்
 கருத்தின் அமைந்த காம வள்ளி
 கோணச் சந்தித் தோரணம் கொளீஇ
 மாலை அணிநகை மேல்உற வளைஇ
 நீலத் திரள்மணிக் கோலக் கருநிரை
 இடையிற் கேற்றுப் புடையில் பொலிந்து

 

100




105

 விழைதகும் விழுச்சீர் மந்த மாமலை
 ழுழையில் போதர முயற்சி போல
 முதல்நிலைப் பலகைச் சுவன்முதல் ஒச்சி
 முரி நிமிர்வன போலஏர் பெற்று
 வைந்நுதி அமைந்த வயிர வாயில்
 கண்நிழல் இலங்கும் ஒளியிற் றாகிப்
 பவழ நான் திகழ்மணிப் பகுவாய்ப்
 பசுமணிப் பரூஉச்செவிப் பன்மணிக் கண்டத்து
 உனளமயிர் அணிந்த உச்சிக்கு ஏற்ப
 வாய்புகு அன்ன வந்துஒசி கொடிபோல்
 சென்றுசெறிந்து இடுகிய நன்றுதிரள் நடுவின்

 
110




115

 தகைமணிக் கோவை தன்கைக்கு ஏற்பப்
 பரூஉத்திரள் குறங்கின் பளிக்குமணி வள்உகிர்த்
 திருத்தம் செறிந்து திகழ்ந்துநிழல் காட்டும்
 உருக்குறு தமனியத்து ஒண்பொன் கட்டில்
 அணிப்பொலிந்து இயன்ற அழல்உமிழ் அரிமான்
 உச்சியில் சுமந்துகொண்டு ஓங்குவிசும்பு இவர்தற்கு
 நச்சி அன்ன உட்குவரு உருவின்

 



120

 தருமாண் ஆசனத்து இருநடு இலங்க
 இருந்த வேந்தைப் பொருந்து மருங்குல்
 தலைவாய் உற்றுத் தலைஎழில் பொலிந்து
 சிலைகவிழ்த்து அன்ன கிம்புரி கல்வி
 நிழல்காட்டு ஆடி நிழல்மணி அடுத்துக்
 கோலம் குயின்ற நீலச் சார்வயல்

 


125




130

 வாடாத் தாரினர் சேடுஆர் கச்சையர்
 வட்டுடைப் பொலிந்த கட்டுடை அல்குலர்
 மலர்ந்தேந்து அகலத்து இலங்குமணி ஆரத்து
 உடன்கிடந்து இமைக்கும் ஒருகாழ் முத்தினர்
 முழவுறழ் மொய்ம்பினர் முடிஅணி சென்னியர்
 கழுமணிக் கடிப்பினர் கடகக் கையினர்
 புடைதிரண்டு அமைந்த பொங்குசின நாகம்
 இடைநிரைத்து அன்ன எழில்வளை கவ்விய
 எழுவுறழ் திணிதோள் எடுத்தனர் ஏந்திப்
 புடைஇரு பக்கமும் போதிகை பொருந்தித்

 


135

 தொடைஅமை கோவை துளங்குமணிப் பன்னகை
 முகிழ்முடிச் சிறுநுதல் முதிரா இளமை
 மகிழ்நகை மங்கையர் மருங்குஅணி யாக
 புடைதிரண்டு இயங்கும் பொங்குமணிக் கவரி
 அடைவண்டு ஓப்பும் அவாவினர் போல
 எழில்மணி இயக்கத் தொழில்கொண்டு ஈய

 

140




145

 மணிவிளக்கு உமிழும் அணிநிலாச் சுவர்மிசை
 வலத்தாள் நீட்டி இடத்தாள் முடக்கிப்
 பொன்பொலிந்து இயலும் பொங்குபூந் தானைப்
 பசும்பொன் கச்சை பத்தியில் குயின்ற
 விசும்பகம் நந்தும் வேட்கையர் போலத்
 தாமரைத் தடக்கையில் தாமம் ஏந்தி
 விச்சா தரர்நகர் எச்சாரும் மயங்கி
 நீனிற முகிலிடைக் காமுறத் தோன்றத்

 



150

 திருமுடி இந்திரர் இருநிலக் கிழவர்
 உரிமை மகளிரொடு உருபுபடப் புனைந்த
 பொத்தகக் கைவினைச் சித்திரச் செய்கைத்
 தத்தம் தானத்து அத்தக நிறீஇ

 




155




160

 அழகுபடப் புனைந்த அலங்குமணித் தவிசின்மிசை
 நிறைகதிர் வெண்மதி நிலாஒளி விரிந்து
 முறையின் மூன்றுடன் அடுக்கின போலத்
 தாம முக்குடை தாமுறை கவிப்ப
 உலக வெள்ளத்து ஆழும் பல்லுயிர்க்கு
 அலகை ஆகிய அருந்தவக் கிழவனை
 இருக்கை இயற்றிய திருத்தகு செல்வத்து
 ஆரணங் காகிய அணிகிளர் வனப்பின்
 பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறித்
 திருமணி அடக்கிய செம்பொன் செப்பின்
 அருமணி சுடரும் அராஅந் தாணம்

 



165




170
 உரிமைச் சுற்றமொடு ஒருங்குடன் துன்றிக்
 கதிவிளக் குறூஉங் கருத்தினன் போல
 விதியில் சேர்ந்து துதியில் துதித்துப்
 பெறற்குஅரும் பேதையைப் பெறுகெனப் பரவிச்
 சிறப்பெதிர் கொள்கைச் சித்திக் கிழவன்
 பேரறம் பேணிய சீர்நெறிச் சிறப்பின்
 தெய்வதை அமர்ந்தெனக் கைம்முதல் கூப்பி
 விரவுமலர்ப் போதொடு வேண்டுவ வீசிப்
 பரவுக்கடன் கழித்தனன் பைந்தா ரோன்என்.