Primary tabs
4.5 ஊகார ஈற்றுச் சிறப்பு விதி
பூ என்னும் ஓர் எழுத்துப் பெயர்ச்சொல்லின் முன்னர் வல்லினம் வந்தால், அவ்வல்லினம் பொதுவிதிப்படி மிகுதலே அல்லாமல், அவ்வல்லினத்துக்கு இனமான மெல்லினமும் மிகும்.
பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும் (நன்னூல், 200)
சான்று :
பூ + கொடி = பூங்கொடி
பூ + சோலை = பூஞ்சோலை
பூ + தடம் = பூந்தடம்
பூ + பொழில் = பூம்பொழில்பொதுவிதிப்படி பூ முன்னர் வரும் வல்லினம் மிகும்.
சான்று :
பூ + பறித்தாள் = பூப்பறித்தாள்
பூ + கடை = பூக்கடை
பூ + கூடை = பூக்கூடை