தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏகார, ஓகார ஈற்றுச் சிறப்பு விதி

  • 4.6 ஏகார, ஓகார ஈற்றுச் சிறப்பு விதி

    ஏகாரமும் ஓகாரமும் இடைச்சொற்கள் ஆகும். இவை பெரும்பாலும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியில் வரும்.

    ஏ, ஓ என்னும் இடைச்சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் பொதுவிதிப்படி மிகாமல் இயல்பாகும்.

    இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே.       (நன்னூல், 201)

    சான்று :

    அவனே + கண்டான் = அவனே கண்டான்
    அவனோ + கண்டான் = அவனோ கண்டான்?

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 14:47:38(இந்திய நேரம்)