Primary tabs
-
1.2 திறனாய்வு : சில பொது வரையறைகள்
இலக்கியத்தைப் பற்றித் திறனாய்வு என்ன சொல்கிறது என்பதற்குப் பல வரையறைகள் உள்ளன. அவை எண்ணிலடங்கா. திறாய்விற்கும் ஓர் அடிப்படை உண்டு.
1.2.1 வரையறைகளின் விளக்கம்
இலக்கியத்தின் மீது அல்லது இலக்கியம் பற்றி எழுவது திறனாய்வு. அந்த இலக்கியத்தை, இலக்கியத்தின் பல்வேறு பண்புகளைத் திறனாய்வு விளக்குகிறது. விளக்குகின்ற அதே நேரத்தில் அந்த இலக்கியத்தைப் பற்றி மதிப்பீடு செய்கிறது. என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்று சொல்லுவதோடு, அதனுடைய திறன், அந்த இலக்கியத்தில் மொத்தமாக எவ்வாறு வெளிப்படுகிறது என்றும் சொல்லுகிறது. அதன் மூலமாக அந்த இலக்கியத்தை மதிப்பீடு செய்கிறது. இலக்கியம் வாழ்க்கையைப் பேசுகிறது என்றால், அத்தகைய வாழ்க்கையை இலக்கியம் எவ்வாறு பேசுகிறது என்று திறனாய்வு சொல்லுகிறது.
இராமன்-சீதை-இராவணன்
கம்பர்
கம்பனுடைய ராமாயணம் இராமன்-சீதை-இராவணன் என்று இவர்களை மையமிட்ட வாழ்க்கையைச் சொல்லுகிறது என்றால், அந்த நூல் பற்றி வ.வே.சு.ஐயர் எழுதிய Kamba Ramayanam - A study என்ற நூல், அவ்வாறு வாழ்க்கையைச் சித்திரிப்பதில் கம்பன் என்ன என்ன வகையான உத்திகளைக் காட்டியுள்ளான். அவற்றின் நேர்த்தியும் சீர்த்தியும் என்ன என்று பேசுகிறது. அது போல், ஏ.சி.பால் நாடார், டி.கே.சிதம்பர நாத முதலியார், மு.மு. இஸ்மாயில், ப.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன், அ.ச.ஞான சம்பந்தன், ச.சோமசுந்தர பாரதியார் முதலிய அறிஞர்களுடைய நூல்களும், கம்பனுடைய இலக்கியத்திறன் பற்றிப் பேசுகின்றன. எனவே ஒரே இலக்கியத்தின் மீது பல திறனாய்வுகள் தோன்றுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் விளக்கம் தருகின்றன; அதன் திறன்பற்றி ஆராய்கின்றன.
ப.ஜீவானந்தம்
டி.கே.சி
அ.ச.ஞானசம்பந்தன்
மு.மு.இஸ்மாயில்நாம் இதுவரை சொன்ன வரையறைகள் மட்டுமே, திறனாய்வின் வரையறைகள் என்று எண்ணிவிடக் கூடாது. இலக்கியம் பற்றிய வரையறைகள் என்றாலும், இலக்கியத் திறனாய்வு பற்றிய வரையறைகள் என்றாலும் இவை எண்ணில் அடங்கா. குறிப்பிட்ட இலக்கியம், குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட திறனாய்வாளன், குறிப்பிட்ட தேவை. நோக்கம் முதலிய பலவற்றைச் சார்ந்துதான் திறனாய்வும் அமைகிறது; திறனாய்வு பற்றிய வரையறைகளும் அமைகின்றன. இவற்றை அவ்வப்போது, தேவைப்படுகிற இடங்களில், நாம் பேசுவோம்.
1.2.2 அடிப்படை
இலக்கியத் திறனாய்வு பற்றிய அடிப்படையான வரையறை என்ன? இலக்கியத்தின் உற்ற தோழனாக இருந்து அதனை உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்று டி.எஸ். எலியட், ரெனே வெல்லக் முதலிய மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் வற்புறுத்துகிறார்கள். குறிப்பிட்ட இலக்கியத்திற்கும் சரி, பொதுவானதொரு இலக்கியச்சூழலுக்கும் சரி, திறனாய்வு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்; அதனை மேலும் வளர்ப்பதாக அமைய வேண்டும். இலக்கியத்தை மேலும் படிப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் திறனாய்வு ஒரு “கிரியா ஊக்கியாக” (catalyst) இருக்க வேண்டும். இதுவே திறனாய்வின் அடிப்படை நோக்கமாகும்.
3.திறனாய்வு - விமர்சனம் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தி வழக்கில் கொண்டு வந்தவர்கள் யார்?
-